எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, மே 23- -நாடாளுமன்ற மக்களவையில், பாஜக உறுப்பி னர்களின் எண்ணிக்கை, 282-இல் இருந்து 272 ஆக குறைந் துள்ளது. இதன் மூலம் இன் னும் ஓரிடம் குறைந்தால் கூட அந்த கட்சி, தனிப்பெரும்பான் மையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2014- ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர் தலில் பாஜக மட்டும் 282 இடங்களில் வெற்றி பெற்றிருந் தது. ஆனால், இடைத் தேர்தல் களில் கிடைத்ததோல்வி மற் றும் எம்.பி.யாக இருந்தவர் களை மாநில முதல்வர்கள் மற் றும் எம்எல்ஏ-க்கள் ஆக்கியது உள்ளிட்ட காரணங்களால் அந்த கட்சிக்கான எம்.பி.க்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.மத்தியில் ஆட்சி அமைத்த பிறகு வதோதரா (குஜராத்) ஷாதோல் (மத்திய பிரதேசம்), லக்கிம்பூர் (அசாம்) ஆகிய 3 தொகுதிகளை மட் டுமே பாஜக தக்க வைத்துக் கொண்டது.

ஆனால், 6 எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது. உத்தரப்பிரதே சத்தில் உள்ள கோரக்பூர், பூல் பூர் ஆகியதொகுதிகளில் சமாஜ்வாதி கட்சியிடமும், பீட் (மத் தியப் பிரதேசம்), குர்தாஸ்பூர் (பஞ்சாப்), ஆல்வார், அஜ்மீர் (ராஜஸ்தான்) ஆகிய தொகுதி களில் காங்கிரசிடமும் பாஜக தோல்வியை தழுவியது. இந்த 6 இடங்கள்தவிர, நிதியமைச்சர் அருண் ஜெட்லி மீதுஊழல் புகார் கூறியதற்காக பாஜக எம்.பி.யான கீர்த்தி ஆசாத்தை, பாஜக-வே இடைநீக்கம் செய் தது. பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹாவும் தொடர்ந்து மோடி - அமித்ஷா தலைமையை எதிர்த்து வருகின்றார். இவற்றுடன் கர்நாடகத்தில் எம்எல்ஏ தேர்தலில் வென்ற தைத் தொடர்ந்து எடியூரப்பா, சிறீராமுலு ஆகியோர் தங்களின் எம்.பி.பதவியை ராஜினாமா செய்ததால், மக்களவையில் பாஜக-வின் பலம் 272 ஆக குறைந்துள்ளது. இதனால் பாஜக ஆட்சிக்கு ஆபத்தில்லை என்றாலும், இன்னும் ஒரு இடம் குறைந்தால் தனிப்பெரும்பான் மையை அந்த கட்சி இழக்கும். மகாராஷ்டிரா, உத்தரப்பிர தேசம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் நான்கு எம்.பி. தொகுதிகளுக்கு மே 28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடை பெறுகிறது. இதில் ஏதாவது வெற்றி கிடைத்தால் பாஜக-வின் பலம் அதிகரிக்கலாம். ஆனால், அதற்கான வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner