எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கவுகாத்தி, மே23 அசாம் மாநிலத்துக்கு சென்ற பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. அசாம் மாநில ஆளும் பாஜக அம்மாநிலத்தில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை சட்டமாக்கு வதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் அதற்கு அம்மாநிலத்தில் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அம்மாநிலத்துக்கு சென்ற போது கிரிஷக் முக்தி சங்க்ரம் சமிதி (கேஎம்எஸ்எஸ்) எனும் விவசாயிகள் அமைப்பின் சார்பில் கருப்புக் கொடி காட்டப்பட்டு அமித் ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் சிறீமந்த கலாசேத்திராவில் வடகிழக்கு ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தில் அமித் ஷா பேசுவதற்காக சென்றபோது, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளி லிருந்தும் பெருமளவிலான மக்கள் திரண்டு கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்போது பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுக்கு எதிராக முழக்கங்களிட்டனர். கொட்டும் மழையிலும் மக்கள் பெருமளவில் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.

விவசாய அமைப்பின் தலைவர் அகில் கோகாய் கூறியதாவது:

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து அறிந்ததும் மாநிலமே அதிர்ச்சி அடைந்தது. இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை யொட்டி பரப்புரை செய்வதற் காக வந்தது ஏற்கமுடியாதது. பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப் பைச் சேர்ந்தவர்கள் மாநிலத் துக்கு வருவது என்பது 2019ஆம் ஆண்டு தேர்தலில் வாக்கு வங்கியை அதிகரிக்கின்ற சதித் திட்டமே ஆகும். குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வருவது என்பது அதே மத்திய அரசு ஏற்படுத்திய அசாம் ஒப்பந்தத்தில் அளிக்கப்பட்ட உறுதி மொழியை மீறுவதாகும்.

அசாம் கண பரிஷத் கட்சி வட கிழக்கு ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகி இருக்க வேண்டும். அதே நேரத் தில் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தால், 2016ஆம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். குடியுரிமை திருத்த சட்ட மசோதா முற்றிலுமாக கைவிடப்படும் வரை அத்திருத்தச்சட்ட மசோதாவை எதிர்த்து போராட்டம் தொடரும்

இவ்வாறு அகில் கோகாய் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் மோடியின் வரு கைக்கு கருப்புக் கொடி காட்டப்பட்டது பன்னாட்டளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது, பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் அமித் ஷாவுக்கு கருப்புக் கொடி காட்டப்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner