எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அனந்த் சர்மா பேட்டி

புதுடில்லி, மே 23 "கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலுக்காக ரூ.6,500 கோடியை பாஜக செலவிட்டுள்ளது' என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டில்லியில் அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

உலகிலேயே மிகப்பெரும் பணக்கார அரசியல் கட்சியாக பாஜக உள்ளது. கருநாடகத் தேர்தலில் சுமார் ரூ.6,500 கோடியை பாஜக செலவிட்டுள்ளது. இந்த பணம் எங்கு இருந்து வந்தது என்பது குறித்து பாஜக விளக்கம் அளிக்க வேண்டும். சட்டப் பேரவை உறுப்பினர்களின் ஆதரவுக்கு, அரசு அமைப்புகளையும், பணபலத்தையும் தவறாக பாஜக பயன்படுத்தியது. இதுகுறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

கருநாடகத்தில் ஆட்சியமைக்கும் விவகாரத்தில், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக நடந்து கொண்டதற்கு, நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும். கர்நாடக தேர்தல் முடிவானது, பாஜகவுக்கு ஆதரவாக கிடைக்கவில்லை. ஆனால், அக்கட்சிக்கு ஆட்சி யமைக்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதை சுயநல நோக் கத்துடன் பாஜகவும் ஏற்றது.

கர்நாடக தேர்தல் பிரசாரத்தின்போது, அரசியல் கண்ணியத்தை பிரதமர் தரம்தாழ்த்தி விட்டார் என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner