எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டில்லி, மார்ச் 20- இஸ்ரேல் நாட்டின் டெல்-அவிவ் நகருக்கு வரும் வியாழக்கிழமை (மார்ச் 22) முதல் டில்லியிலிருந்து நேரடி விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கு கிறது.

256 இருக்கைகளைக் கொண்ட போயிங் 787-800 ரக விமானங் களை இந்தச் சேவைக்கு அந்த நிறுவனம் பயன்படுத்தவிருக் கிறது.

ஏற்கெனவே, டில்லிக்கும் டெல்-அவிவ் நகருக்கும் இடையே நேரடி விமான சேவை தொடங் கும் அறிவிப்பை ஏர் இந்தியா இந்த மாதம் 7-ஆம் தேதி வெளி யிட்டது.

இஸ்ரேலுக்குச் செல்வதற் காக சவூதி அரேபிய வான் எல் லையைப் பயன்படுத்த முடி யாத நிலை இருந்து வந்தது.

இந்தச் சூழலில், ஏர் இந் தியா விமானங்கள் தங்கள் நாட்டு வான் எல்லை வழியாக இஸ்ரேல் செல்ல சவூதி அரே பியா அனுமதி அளித்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்ததைத் தொடர்ந்து, டெல்-அவிவ் நக ருக்கு நேரடி விமானம் இயக்க ஏர் இந்தியா முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

ஓமன், சவூதி அரேபியா, ஜோர்டான் ஆகிய நாடுகள் வழியாக இஸ்ரேல் செல்வதற்கு ஏர் இந்தியா விமானங்கள் 7 மணி நேரம் எடுத்துக் கொள் ளும் என்று தகவல்கள் தெரி விக்கின்றன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner