எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, மார்ச் 10 உறுப் பினர்கள் தங்கள் ஓய்வூதியப் பணத்தை பெற வங்கி கணக்கு மற்றும் ஆதார் எண் ஆகிய வற்றுடன் தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனத்தின் கணக்கு எண் ணை இணைத்து இணைய தளம் மூலமாக விண்ணப்பம் செய் யலாம் என்று தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உறுப்பினர்கள் இணையதளம் மூலமாக வங்கிக் கணக்கு மற்றும் ஆதார் எண் ஆகியவற்றுடன் தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனத்தின் கணக்கு எண்ணை இணைத்து ஓய்வூதியப் பணத்தை பெற விண்ணப்பம் செய்யலாம்.

அதாவது, வருங்கால வைப்பு நிதி ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக வும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து எடுக் கப்படும் பணத்தின் மதிப்பு ரூ.5 லட்சத்துக்கும் மேல் இருந்தால் அவற்றை பெறுவதற்கான படி வங்களை இணையதளம் மூல மாக சமர்ப்பித்தால் ஏற்றுக்கொள் ளப்படும் என்பதை நிறுவன உரிமையாளர்கள் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

மேலும், மேற்குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாக வரும் தொகைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக ஏற்கப் படும்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் காகித மற்றும் மின்னணு முறைக்கு இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் மாறுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் கொடுத்த கணக்கு எண்ணுடன் ஆதார் மற்றும் வங்கி கணக்கு இணைக் கப்பட்டு இருப்பதை நிறுவன உரிமையாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

அப்படி செய்திருந்தால்தான் இணைதளம் வாயிலாக ஓய்வூ தியப் பலனை பெறுவதற்காக விண்ணப்பங்களை வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner