எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொல்கத்தா, செப்.11 அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக மத்திய அரசால் சிபிஅய் பயன்படுத்தப்படுகிறது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்குவங்கத்தில்முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல்காங்கிரசுகட்சி ஆட்சி நடைபெற்று வரு கிறது.கொல்கத்தாவில்உள்ள மம்தா பானர்ஜி இல்லத்தில் திரிணாமுல் கட்சியின் நிர்வாகி கள் குழு கூட்டம் நடைபெற்றது. இதில்கலந்துகொண்டமம்தா பேசுகையில்,

நாரதாவீடியோஊழல் விவகாரத்தில்திரிணாமுல்கட் சியின் ஏராளமான தலைவர் களுக்கு எதிராக சிபிஅய் சம்மன் அனுப்பியுள்ளது. அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் கட்சி தலைவர்களுக்கு எதிராக மத்திய அரசு சிபிஅய்யை பயன்படுத்தி வருகிறது. 2019 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு மத்தியில் பாஜ ஆட்சி அகற்றப்படும். நாரதா விவ காரத்தில் சிபிஅய் சம்மன் அனுப்பப்பட்ட தலைவர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் சிபி அய்யிடம் எந்த வித ஆதாரமும் கிடையாது. எனவே நாம் அஞ்சத் தேவையில்லை. சிபிஅய் உள்ளிட்ட மத்திய புலனாய்வு நிறுவனங்கள் திரி ணாமுல் தலைவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வரு கின்றன. தினமும் திரிணாமுல் கட்சி தலைவர்கள் யாருக்காவது சிபிஅய் சம்மன் அனுப்பிய வண்ணம் உள்ளது. இது அரசியல் ரீதியாக மிரட்டல் விடுப்பதை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? ஆனால், இதனால் மத்திய அரசுக்கு எந்த பலனும் கிடைக் கப் போவதில்லை. பாஜ சொன்ன எந்த வளர்ச்சியும் நடக்கவில்லை. 2019 தேர்தலுக்கு பிறகு ஆட்சியில் நிச்சயம் பாஜ இருக்காது.

துர்கா பூஜை, மொகரம் ஆகியன முன்னிட்டு சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் செயல்களில் சங் பரிவார் கட்சிகள் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே திரிணாமுல் கட்சியினர் மிகவும் விழிப்புணர்வுடன் இருந்து அவர்களது சதியை முறியடிக்க வேண்டும் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner