எழுத்துரு அளவு Larger Font Smaller Fontபுதுடில்லி, செப்.8 பிஎஸ்எல் வி-சி39 ராக்கெட்டின் வெப்ப பாதுகாப்பு தகடு களுக்குள் சிக்கிய அய்ஆர் என்எஸ்எஸ்-1எச் செயற் கைக்கோள் இன்னும் 2 மாதத்தில் அட்லாண்டிக் கடலில் விழும் என எதிர் பார்க்கப்படுகிறது என இஸ்ரோ கூறியுள்ளது.

1425 கிலோ எடையுள்ள அய்ஆர்எஸ்எஸ்எஸ்-1எச் என்ற 8 ஆவது  வழிகாட்டி செயற்கைக்கோள் பிஎஸ் எல்வி-39 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 31 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட் டது. ஆனால் செயற்கைக் கோளை சுற்றியுள்ள, ராக் கெட்டின் வெப்ப பாது காப்பு தகடுகள் கடைசி கட்டத்தில் பிரியவில்லை. இதனால் ரூ.250 கோடி மதிப்பிலான திட்டம் தோல்வியடைந்தது. இதற் கான காரணம் குறித்து ஆராய விக்ரம் சாராபாய் விண்வெளி மய்ய தலைவர் டாக்டர் கே.சிவன் தலை மையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இது குறித்து சிவன் கூறுகையில்,
2.4 டன் எடையுள்ள செயற்கைக்கோள், இன் னும் 40 முதல் 60 நாளில் பூமியின் வழிமண்டல பகு திக்குள் நுழையும். ராக்கெட் டின் வெப்ப பாதுகாப்பு தகடுக்குள் சிக்கிய செயற் கைக்கோள் செல்லும் பாதையை தொடர்ந்து கண் காணித்து வருகிறோம்.  இது பசிபிக் கடலில் விழ லாம் என கணக்கிட்டுள் ளோம் என்றார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner