எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, செப்.8 தட்டம்மை தடுப்பூசி போடுவதில் இந்தியா மற்றும் இந்தோனேசியா பின் தங்கி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு ஆசியா விற்கான அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஆண்டு இந்தியா மற்றும் இந்தோனேசியாவில் தட்டம்மை தடுப்பூசி அனைத்து குழந்தைகளுக்கும் போடவில்லை என கூறியுள்ளது.

இந்தியாவில் 3.1 மில்லியன் குழந்தைகளும், இந்தோனேசியாவில் 1.1 மில்லியன் குழந்தைகளும் தடுப்பூசி போடாமல் உள்ளனர். அதாவது மொத்தமாக 91 சதவீதம் பேர் தடுப்பூசி போடாமல் உள்ளனர். அவற்றில் 67 சதவீதம் பேர் இந்தியாவைச் சேர்ந்த வர்கள். பல குழந்தைகள் தட்டம்மை நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

இதற்கு காரணம் தட்டம்மை தடுப்பூசி குறித்த தவறான கருத்தாகும். தடுப்பூசி போடுவதினால் பல பக்க விளைவுகள் ஏற்படுவதாக தவறாக செய்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதை நம்பி பல மக்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட பயந்து போடாமல் இருந்துள்ளனர். இதனால் தட்டம்மை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட உள்ளன. மாலத்தீவு மற்றும் பூடான் போன்ற நாடு களில் தட்டம்மை நோய் முழுவதுமாக தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் பருவமழைக்கு  39 குழந்தைகள் உள்பட 164 பேர் பலி


இசுலாமாபாத், செப்.8 பாகிஸ்தானில் இந்த ஆண்டு பெய்த பருவமழைக்கு 39 குழந்தைகள் உள்பட 164 பேர் பலியாகியிருப்பதாக தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்த்த பெருமழை யால் இங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத் தோடியது. வெள்ளநீரில் மூழ்கியும், நிலச்சரிவில் சிக்கியும் ஜூன் 26 முதல் முதல் செப்டம்பர் 6 வரை மட்டும் 39 குழந்தைகள் உள்பட 164 பேர் பலியானதாக தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. 440 வீடுகள் சேதமடைந்துள்ளன. வெள்ளத்தில் சிக்கி இருந்த மக்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்டனர். மீட்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner