எழுத்துரு அளவு Larger Font Smaller Fontடில்லி, ஆக.12 நாடு முழுவதும்  (9.8.2017)அறிவியல் விழிப்புணர்வு பேரணி 26 அன்று நகரங்களில் நடைபெற்றது.

அறிவியல் விழிப்புணர்வு பேரணியின் முக்கிய கோரிக்கைகளாக குறிப்பிடுகை யில், அறிவியல் மற்றும் அறிவியல் மனப் பான்மையை வளர்த்தெடுக்க வேண்டும்,  அறிவியலுக்கு முரணாணன மூடக்கருத்து கள் பரவுதலை தடுத்து நிறுத்த வேண்டும்.

முதலாவதாக அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடுகளை அரசு அளிக்க முன்வர வேண்டும்.

இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தில் குறைந்த பட்சம் 3 விழுக்காடு அளவில் நிதி ஒதுக்கீடுகளை அறிவியல் மற்றும தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்கு ஒதுக்கிட அரசு முன் வரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், கல்வி வளர்ச்சிக்காக 10 விழுக்காட்டை ஒதுக்கிட அரசு முன்வரவேண்டும்.

இரண்டாவதாக, அறிவியலுக்கு முரணான பரப்புரைகளை, ஆபாசமான அறிவியலுக்கு முரணான கொள்கைகளை, மதரீதியிலான சகிப்பின்மையை  தடுத்து நிறுத்திட வேண்டும். இந்திய அரசமைப்பு சட்டத்தின் 51ஏ பிரிவில் உறுதியளிக்கப் பட்டவற்றை காப்பாற்ற வேண்டும்.
மூன்றாவதாக, அறிவியல் ஆதாரங் களின் அடிப்படையிலேயே கல்வி முறை அமைந்திடல் வேண்டியதும் அவசிய மாகும்.

அறிவியல் ஆதாரங்களின்படியே அரசின் கொள்கைகளும் அமைதல் வேண் டும். இந்தியாவில்  இப்போதுதான் முதல் முறையாக அறிவியலுக்கான பேரணி நடைபெறுகிறது.

அறிவியல் கல்வியை மேம்படுத்தவும், அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு போதிய அளவில் நிதி செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நாடுமுழுவதும் அறிவியலை வளர்த்தெடுப்பதை அரசு கொள்கையாக கொண்டிருக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தி  நாடுமுழுவதும் 600 நகரங்களில் கடந்த ஏப்ரல் 22 அன்றும் ’அறிவியலுக்கான பேரணி’ நடைபெற்றது.

அப்பேரணிகளில் மாணவர்கள், ஆசிரி யர்கள், பேராசிரியர்கள், அறிவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner