எழுத்துரு அளவு Larger Font Smaller Fontபுதுடில்லி, ஆக.11 காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக் கல் செய்யப்பட்ட மேல் முறை யீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.  ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.

4- ஆவது நாளாக நேற்று (10.8.2017) தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கு ரைஞர் சேகர் நாப்டே, வழக்கு ரைஞர்கள் ஜி.உமாபதி, சி.பரமசிவம் ஆகி யார் ஆஜரா னார்கள்.

சேகர் நாப்டே வாதாடுகையில் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் சாகுபடி செய் யப்படும் நிலப்பரப்பு 29 லட்சம் ஏக்கர் உள்ளது. ஆனால் காவிரி நடுவர் மன்றம் இதில் 5 லட்சம் ஏக்கரை குறைத்து 24 லட்சமாக மதிப்பிட்டது, தமிழ்நாட்டுக்கு மிகவும் பாதகத்தை ஏற்படுத்தி உள்ளது.

29 லட்சம் ஏக்கருக்கான பாசன தேவை, குடிநீருக்கான தேவை ஆகியவற்றை கணக்கில் கொண்டால், தமிழ்நாட்டுக்கு உரிய நியாயமான நீர் பங்கீடு 566 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) ஆகும். காவிரி நடுவர் மன்றம் எங்கள் வாதங்களை கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் பயன்பாட்டு உரி மையை 419 டி.எம்.சி.யாக குறைத்துள்ளது. எனவே, உச்ச நீதிமன்றம் அனைத்து அம்சங் களையும் கருத்தில் கொண்டு 566 டி.எம்.சி.யாக உயர்த்தி உத்தர விடவேண்டும்.

மொத்தம் உள்ள 740 டி.எம்.சி. தண்ணீரை 4 மாநிலங்களும் பங் கிட்டு கொள்ளவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறோம்.
அவர் இவ்வாறு கூறியதும் குறுக்கிட்ட கருநாடக அரசு வழக் குரைஞர் மோகன் கத் தார்க்கி, பங்கீட்டுக்குரிய தண்ணீரின் மொத்த அளவு 740 டி.எம்.சி. என்றால் காவிரி நடுவர் மன்றம் எடுக்காத முடிவை இந்த நீதி மன்றம் எடுக்கவேண்டும் என் றும், ஒவ்வொரு மாநிலத்துக்கும் உரிய நியாயமான பங்கீட்டை வழங்க வேண்டும் என்றும் கூறி னார்.

அதற்கு நீதிபதிகள், இந்த நீதிமன்றம் இதுபற்றிய தீர்ப்பை வெளியிட்டால் பிறகு காவிரி நடுவர் மன்றத்துக்கு எந்த வேலை யும் இருக்காது என்று கூறி னார்கள்.

மேலும் இந்த மாத இறுதிக் குள் இந்த வழக்கை முடித்தாக வேண்டும் என்று கூறிய நீதிபதி கள் வழக்கு விசாரணையை வரு கிற 16- ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner