எழுத்துரு அளவு Larger Font Smaller Font


புதுடில்லி, மே 18  பாக்கெட் உணவுகளில் அடங்கியுள்ள ஊட் டச்சத்துகள் குறித்து, நுகர்வோர் எளிதாக அறியும் வகையில், பாக்கெட்டின் வெளிப்புறத்தில், விளம்பரப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட புதிய விதி முறைகள், விரைவில் அமலுக்கு வர உள்ளன.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆய்வு ஆணையமான  எப்.எஸ்.எஸ்.ஏ.அய்., நாடு முழு வதும் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை கண்காணித்து வருகிறது. இந்த அமைப்பு, பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும், பதப் படுத்திய உணவு வகைகள் தொடர்பான விதிமுறைகளை உருவாக்க, வல்லுனர் குழு ஒன்றை அமைத்திருந்தது.

இக்குழுவின் பரிந்துரையை ஏற்று, பாக்கெட் உணவுகள் குறித்த புதிய விதிமுறைகளை, எப்.எஸ்.எஸ்.ஏ.அய்., விரைவில் வெளியிட உள்ளது.இது குறித்து, இந்த அமைப் பின் தலைமை செயல் அதிகாரி பவன் குமார் அகர்வால் கூறியதாவது:

வல்லுநர் குழு, பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது. குறிப்பாக, அதிக அளவிற்கு பதப்படுத்தப்படும் உணவுகள், சர்க்கரை கலந்த குளிர்பானங்கள் ஆகியவற்றுக்கு, கூடுதல் வரி விதிக்க வலியுறுத்தி உள்ளது.

ஜங்க் புட்ஸ் எனப்படும், நொறுக் குத்தீனிகள் குறித்து, குழந்தை களுக்கான, டிவி சேனல் அல்லது அவர்களுக்கான, டிவி நிகழ்ச்சிகளின் நடுவே விளம்பரப்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்து உள்ளது.

உணவுப் பொருட்கள் அடங் கிய பாக்கெட் மீது, உள்ளே அடைக்கப்பட்டுள்ள உணவின் மொத்த கலோரிகள், கார்போ ஹைட்ரேட், சர்க்கரை, கொழுப்பு, புரதம், சோடியம், நார் சத்து உள்ளிட்ட விபரங்களை, கண்டிப் பாக அச்சிட வேண்டும் என, குழு பரிந்துரைத்து உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner