எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அகமதாபாத், மே 18 குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ.க., ஆட்சி நடக்கிறது. மாநிலத்துக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் ஒதுக் கீட்டை, மத்திய அரசு குறைத்துவிட்டு, உஜ்ஜவ்லா திட்டத்தின்கீழ், சமையல் எரிவாயுசிலிண்டர்கள்வழங் கப்படு கின்றன. இதனால், மண்ணெண்ணெய்விநியோ கஸ்தர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து, மாநில நியாய விலை கடை உரி மையாளர்கள் மற்றும் உரிமம் பெற்ற மண்ணெண்ணெய் விநியோகஸ்தர்கள்சங் கத் தலைவரும், பிரதமர் மோடியின் இளைய சகோதரருமான, பிரஹலாத் மோடி (56), கூறியதாவது:

குஜராத்தை, மண்ணெண்ணெய் இல் லாத மாநிலமாக மாற்ற, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக, மண் ணெண்ணெய் ஒதுக்கீட்டை குறைத்து விட்டதால், மண்ணெண்ணெய் இருப்பு மிகவும் குறைந்துவிட்டது.

உஜ்ஜவ்லா திட்டத்தின் கீழ், சமையல், ‘காஸ்’ சிலிண்டர் வழங்கப்படுகிறது. இதனால், மண்ணெண்ணெய் விநியோகஸ் தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, காஸ் சிலிண்டர் விநியோகத்தை எங்க ளிடம் வழங்கவேண்டும்; நியாய விலை கடை உரிமையாளர்களின் குழந்தைகளின் மேற்படிப்புக்கு நிதி உதவி வழங்கவேண் டும். இது தொடர்பாக, மத்திய அரசிடம் நீண்ட நாட்களாக கோரி வருகிறோம்.

கால வரையற்ற

போராட்டம்

வரும், 28 ஆம் தேதிக்குள், எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், மத்திய அரசை எதிர்த்து, நியாய விலை கடை உரிமையாளர்கள் மற்றும் உரிமம் பெற்ற மண்ணெண்ணெய் விநியோகஸ்தர்கள், கால வரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner