எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஏப்.21 டில்லி யில் யமுனை நதிக் கரையில், வாழும் கலை அமைப்பு நடத் திய நிகழ்ச்சி தொடர்பாக, மத்திய அரசையும், பசுமை தீர்ப்பாயத்தையும் குறைகூறும் வகையில், கருத்து தெரிவித் துள்ள அந்த அமைப்பின் தலை வர், சிறீசிறீ ரவிசங்கர் பேச் சுக்கு, தேசிய பசுமை தீர்ப்பா யம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ரூ. 42 கோடி சேதம் : வாழும் கலை அமைப்பின் சார்பில், டில்லி, யமுனை நதிக் கரை யில், கடந்த ஆண்டு, சர்வதேச கலாசார, யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி யால், யமுனை நதி மாசடைந் துள்ளதாக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொட ரப்பட்டது.

இது தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட நிபுணர் குழு வும் இதை உறுதி செய்துள்ளது. நிகழ்ச்சி மூலம், 42 கோடி ரூபாய் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர் குழு கூறியுள்ளது.இந்த நிலையில், இது தொடர்பாக சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்த ரவி சங்கர், 'இந்த நிகழ்ச்சிக்கு மத்திய அரசும், தேசிய பசுமை தீர்ப்பாயமும் அனுமதி அளித் தன. 'அதன்படியே நிகழ்ச்சி நடந்தது. யமுனை நதிக் கரை யில் ஏதாவது சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அதற்கு இவையே பொறுப்பு. நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத் திருக்க வேண்டியதுதானே' என்று பேசியுள்ளார்.

இதை, வழக்கு தொடர்ந்துள் ளோர், தேசிய பசுமை தீர்ப் பாயத்தில் குறிப்பிட்டுள்ளனர். 'ரவிசங்கரின் பேச்சு, வாழும் கலை அமைப்பின் இணைய தளத்திலும், அவருடைய, ‘முகநூல்’ சமூக தளத்திலும் வெளியாகிஉள்ளது. அவர் மீது நட வடிக்கை எடுக்க வேண் டும்' என, மனுதாரர்கள் குறிப் பிட்டு உள்ளனர்.

அதைத் தொடர்ந்து, நீதிபதி சுதந்திர குமார் தலைமையிலான, தேசிய பசுமை தீர்ப்பாய அமர்வு கூறியதாவது: ரவிசங்கரின் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது. உங்களுக்கு கொஞ் சம்கூட பொறுப்பில்லையா? இவ்வாறு பேசுவதற்கு உங்க ளுக்கு யார் அதிகாரம் கொடுத் தது. எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைக் கிறீர்களா?இவ்வாறு அமர்வு கடும் கண்டனம் தெரிவித்தது.இதற்கிடையில், வாழும் கலை அமைப்பின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. 'நிபுணர் குழுவின் அறிக்கையில் எங்களுக்கு உடன்பாடில்லை. அதை நிராகரிக்க வேண்டும்' என, அதில் குறிப்பிடப்பட்டுள் ளது. 'வழக்கில் தொடர்புடை யோர், இது தொடர்பாக, இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும்' என்று கூறி, வழக்கின் விசாரணையை, மே, 9க்கு ஒத்திவைத்தது, தேசிய பசுமை தீர்ப்பாயம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner