எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஏப்.20 விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலி யுறுத்தி தமிழக விவசாயிகள் 37ஆ-வது நாளாக டில்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தேசிய தென்னிந் திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக் கண்ணு தலை மையில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக விவசாயிகள் தினமும் நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடைசியாக நேற்று பிரதமர் மோடி விவசாயிகளை சாட்டை யால் அடிப்பது போன்ற போராட்டத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது. விவசாயிகளின் போராட்டத்துக்கு இளைஞர்கள், மாண வர்கள் என பல் வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இன்று சட்டையை கிழித்துக் கொண்டு போராட்டம் நடத்தினர். இந் நிலையில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ் ணன் விவசாயிகளை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது விசாயிகள் போராட்டத்தை கைவிடும் படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து விவசாயிகளுடன் போராட்டக்குழுத் தலைவர் அய்யாக்கண்ணு ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தி யாளர்களை சந்தித்த அவர், தங்களது போராட்டத்தை 2 நாட்கள் தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரி விக்கும் போது, எங்களது போராட் டத்தை திரும்பப் பெறவில்லை. மாறாக 2 நாட்கள் போராட்டத்தை ஒத்தி வைத் துள்ளோம் என்றார். அரசின் எழுத்துப் பூர்வ உறுதிமொழி அளிக்கும் வரை காத்திருப்போம் என்றும் அய்யாக் கண்ணு தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner