எழுத்துரு அளவு Larger Font Smaller Font


புதுடில்லி, ஏப்.17 ரயிலில் பயணம் செய்யும் முதியோர், பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக, முன்பதிவு பயணச்சீட்டிற்கான படுக்கை வசதியை ஒதுக்கீடு செய்வதில், பெரும் மாற்றத்தை ஏற்படுத்த, ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.
ரயில்களில் முன்பதிவு செய் யப்பட்ட பெட்டிகளில், பொது வாக, கர்ப்பிணிகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி  களுக்கு என, குறிப்பிட்ட எண் ணிக்கையில், 'லோயர் பர்த்'கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.  ஆனால், நான்கு மாதங்களுக்கு முன், பயணச்சீட்டு முன்பதிவு செய் யும் போது, பயணிகள் விருப் பப்படி, படுக்கை வசதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு விடு கின்றன. இதனால், இதற்கு பின் முன்பதிவு செய்யும் பெண்கள், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, 'லோயர் பர்த்' கிடைப்பது இல்லை. இப்பிரச்சினையை தவிர்க்க, பயணச்சீட்டு முன்பதிவு செய் யும் போது, உறுதி செய்யப் பட்ட பயணச்சீட்டுகள் கிடைத் தாலும், அவர்களுக்கான படுக்கை வசதியை, ரயில் புறப்படுவ தற்கு, ஆறு முதல் எட்டு மணி நேரத்துக்கு முன் ஒதுக்கீடு செய்ய, ரயில்வே வாரியம் திட் டமிட்டு உள்ளது.இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதா வது: ரயில் புறப்படுவதற்கு, ஆறு முதல் எட்டு மணி நேரத் துக்கு முன், பெண்கள், முதி யோர் மற்றும் மாற்றுத் திறனா ளிகளுக்கு, 'லோயர் பர்த்'கள் ஒதுக்கப்படும். அதன்பின் உள்ள படுக்கைகள், சாதாரண பயணிகளுக்கு ஒதுக்கப்படும். ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன், படுக்கை வசதி குறித்த குறுஞ்செய்தி, பயணிகளின் மொபைல் எண் ணுக்கு அனுப்பப்படும்.

முதற்கட்டமாக, இம்மாத இறுதியில், ராஜதானி போன்ற ரயில்களில் இத்திட்டம் அமல் படுத்தப்படும். மே மாதத்தில், 200க்கும் மேற்பட்ட ரயில்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப் படும். ஜூன் மாத இறுதிக்குள், அனைத்து ரயில்களிலும் இத் திட்டம் அமல்படுத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.




.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner