எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, மார்ச், 20 ஒரே விஷ யத்தில் மாறி மாறி பேசி, முரண் பாடான வாதங்களை சி.பி.அய்,, வழக்குரைஞர் வைக்க, அதற்கு பதிலடியாக, ஆ. இராசா அதிரடி காட்ட, ஸ்பெக்ட்ரம் வழக்கின் இறுதிகட்ட விசாரணை பரபரப்பை ஏற்படுத்தியது. '2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில், சி.பி.அய்.,யின் பல்வேறு குற்றச்சாட்டுக்களில், மிக முக்கியமானது கலைஞர், 'டிவி'க்கு, 200 கோடி ரூபாய் போய்ச் சேர்ந்த விவகாரம்.முன்னாள் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு துறை அமைச்சரும், தி.மு.க.,வைச் சேர்ந்தவருமான, ஆ.இராசா, டாடா நிறுவனத்தை புறந்தள்ளிவிட்டு, ஸ்வான் நிறுவனத்துக்கு சலுகை காட்டியதற்கான பிரதிபலனாகத்தான், ஸ்வான் மூலம், கலைஞர், 'டிவி'க்கு, 200 கோடி ரூபாய் தரப் பட்டுள்ளது என்பது தான், சி.பி.அய்.,யின் குற்றச்சாட்டு.

இதற்கு ஆ. இராசா தரப்பு அளித்த பதில்:
அரசுக்கு ஏற்கனவே செலுத்த வேண்டிய நிலுவை பாக்கியை, டாடா நிறுவனம் வைத்திருந்தது. பாக்கியில்லா சான்றிதழை, அந்நிறுவனம் இணைக்கவில்லை. அதனால் தான் கிடப்பில் வைக்கப்பட்டு இருந்தது.மூன்று மாதம் கழித்து, பாக்கியில்லா சான்றிதழை அளித்ததும், அதே நாளில், டாடா உரிமம் கோரியிருந்த கோப்பில் கையெ ழுத்திட்டு அனுப்பி விட்டேன். இவ்வாறு பதிலில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, இறுதிக்கட்ட மறு விசாரணையின்போது, டில்லி, பாட்டியாலா நீதிமன் றத்தில், சி.பி.அய்., வழக்குரைஞரான குரோவருக்கும், இராசாவுக்கும் கடும் வாக் குவாதம் நடந்தது.குரோவர்வாதிடுகை யில், ''இந்த விவகாரத்தில், வேண்டு மென்றே, இராசா தாமதம் செய்தார். இதில், குற்றச் சதி உள்ளது. 200 கோடி ரூபாய் தொடர்புள்ள நிகழ்வு என்பதால், நீதிபதி மிகுந்த கண்டிப்புடன் அணுக வேண்டும். இந்த விவகாரத்தில் விதிகள் மீறப்பட்டு உள்ளன,'' என்றார்.

அப்போது குறுக்கிட்ட இராசா, ''பாக்கி வைத்துள்ள நிறுவனத்திற்கு கையெழுத்துப் போட்டிருந்தால், உள் நோக்கத்துடன், டாடாவுக்கு சலுகை காட்டு வதற்காக, உரிமம் வழங்கி விட்டார் இராசா என சி.பி.அய்., குற்றம் சாட்டியிருக்காதா,'' என்றார்.
இதற்கு குரோவர், ''இது தொடர்பாக, விதிமுறை இருப்பது உண்மைதான். இருப்பினும், பாக்கியில்லா சான்றிதழ், டாடா போன்ற பழைய நிறுவனங்களுக்கு பொருந்தாது. புதிய நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந் தும்,'' என்றார்.

இதை சற்றும் எதிர்பாராத இராசா, தன் வாதத்தில் கூறிய தாவது: சி.பி.அய்., வழக்குரைஞர் தடுமாறுகிறார். அவர் என்ன சொல்ல வருகிறார் என புரியவில்லை. புதிய நிறு வனங்கள், தங்கள் தொழிலைக் கூட துவங்காத நிலையில்,அரசுக்கு எப்படி பாக்கி வைத்திருப்பார்கள்? அவர்களிடமிருந்து எதற்காக பாக்கியில்லா சான்றிதழை, அரசாங்கம் எதிர்பார்க்க வேண்டும்?
இவ்வாறு அவர் கேட்கவே, நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் சிரித்து விட்டனர்.

இறுதியாக பேசிய நீதிபதி சைனி, ''முரண்பட்ட வாதத்தை வைப்பதற்கு குற்றம் சாட்டப்பட்ட வர்களுக்குத் தான் உரிமை உண்டு. குற்றம் சாட்டும் அரசு தரப்புக்கு, அந்த உரிமை இல்லை. முரண்பட்ட வாதத்தை முன் வைப்பதை, சி.பி.அய்., தவிர்க்க வேண்டும்,'' என்று கண்டிக்கவே,பரபரப்பு ஏற்பட்டது.

ஜூலையில் தீர்ப்பு?
சி.பி.அய்., மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என இரு தரப்பு வாத பிரதிவாதங்கள் ஏற்கனவே முடிவடைந்து இருந்தன. கடைசி வாய்ப்பான, சுருக்கமான மறுவாதமும், இருதரப்புக்கும் முடிவடைந்து விட்டது. இனி, அமலாக் கப்பிரிவு தரப்பின் வாதங்கள், 10 நாட்களுக்கு நடக்கும். அதன் பின், வழக்கு விசாரணை முடிவடையும். கோடை விடுமுறை முடிந்து, வரும் ஜூலையில், இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner