எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, மார்ச் 15- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், மேகதாதுவில் கர் நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க வேண்டும், விவசாய விளை பொருட்களுக்கு நியாய மான விலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தேசிய தென் னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழகத்தில் பல கட்ட போராட் டங்கள் நடைபெற்றன.

இதைத்தொடர்ந்து அந்த சங்கத்தினர் டில்லியில் தொடர் உண்ணாநிலைப் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். அதன்படி சங்க தலைவர் அய் யாக்கண்ணு தலைமையில் 4 பெண்கள் உள்பட ஏராளமான விவசாயிகள் தமிழகத்தில் இருந்து ரயில் மூலம் நேற்று காலை டில்லி சென்றனர்.

டில்லி ரயில் நிலையத்தில் இறங்கிய அவர்கள் பச்சைநிற வேட்டி மற்றும் தலையில் பச் சைநிற தலைப்பாகை மட்டும் கட்டிக்கொண்டு அரை நிர் வாணத்துடன் மெட்ரோ ரயி லில் ஏறி பிரதமர் மோடி இல் லம் அருகே இறங்கினர். கழுத் தில் மனித மண்டை ஓடு தொங்க விட்டும், கைகளில் மண்சட்டி யும் வைத்திருந்தனர். பின்னர் அவர்கள் லோக் கல்யாண் சாலையில் அமைந்துள்ள பிரத மர் மோடியின் வீட்டை முற்று கையிட புறப்பட்டனர்.

ஆனால் அங்கு பாதுகாப் பில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் காவல்துறையினருக் கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து விவசாயி களை அங்கிருந்து ஜந்தர் மந்தர் பகுதிக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். அங்கு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் விவசாயிகள் அந்த சாலையில் அமர்ந்தும், படுத் தும் உண்ணாநிலை போராட் டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சங்க தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் அட மானம் வைத்த நகைகள் ஏலம் போய்விட்டன. இழப்பாலும், வங்கி அதிகாரிகளின் நடவடிக் கையாலும் விவசாயிகள் தற் கொலை செய்து வருகிறார்கள். எனவே கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும் என் பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஒன்றும் நடக்க வில்லை. உயிரை மாய்க்கும் நிலை வந்து விட்டது. தமிழகத் தில் உயிர் போவதைவிட டில் லியில் போகட்டும் என்று இங்கு வந்திருக்கிறோம். எங்க ளது உண்ணாநிலை போராட் டம் தொடர்ந்து 100 நாட்கள் நடைபெறும். தொடர்ச்சியாக 6 குழுக்கள் உண்ணாநிலை இருப்பார்கள் என்று கூறினார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner