எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, பிப்.4 உடல் பருமன் போன்ற காரணங்களால் அடுத்த, 20 ஆண்டுகளில் ஆண்களை விட பெண்களுக்கு புற்றுநோய் பாதிக்கும் அபாயம், 6 மடங்கு அதிகம் உள்ளதாக இங்கிலாந்து புற்றுநோய் ஆய்வு கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சர்வதேச புற்றுநோய் தினம். இதனை முன்னிட்டு புற்றுநோய் பாதிப்பு மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகள் குறித்த ஆய்வறிக்கையை இங்கிலாந்து புற்றுநோய் கழகம் வெளியிட்டுள்ளது. இதில் உடல் பருமன் சார்ந்த புற்றுநோய்கள் பெண்களையே அதிகம் பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் பருமனை தொடர்ந்து, பெண் புற்றுநோயாளிகள் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது புகைபிடித்தல் ஆகும்.

உலக சுகாதார மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அதிக உடல் பருமன், குறைவான பழங்கள் மற்றும் காய்கறி களை உட்கொள்ளுதல், குறைவான உடல் உழைப்பு, புகை யிலை மற்றும் ஆல்கஹால் உட்கொள்ளுதல் ஆகியவையே புற்றுநோயை ஏற்படுத்தும் முக்கிய பழக்கவழக்கங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 6ல் ஒருவர் புற்றுநோயால் உயிரிழக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோயால் 88 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மட்டும், 10 லட்சத்திற் கும் அதிகமானவர்களுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப் படுகிறது. புற்றுநோயை தாமதமாக கண்டறியவதால் ஒவ்வொரு ஆண்டும் 7 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்தியாவில் உயிரிழக்கிறார்கள். 2020ம் ஆண்டில் இந்தியாவில் புதிதாக புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 17.3 லட்சத்திற்கும் அதிகமாகவும், புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 8.8 லட்சத்திற்கும் அதிகமானதாக இருக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner