எழுத்துரு அளவு Larger Font Smaller Fontபுதுடில்லி, பிப்.4 பாகிஸ் தான், இலங்கை சிறைகளில் மொத்தம் 167 இந்திய மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநிலங்கள வையில் எழுப்பப்பட்ட கேள் விக்கு மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறப்பட்டுள் ளதாவது:

இலங்கையில் உள்ள சிறை களில் மொத்தம் 20 இந்திய மீன வர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் உள்ள சிறைகளில் மொத்தம் 147 இந்திய மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் உள்ள சிறை களில் அடைக்கப்பட்டுள்ள இந் திய மீனவர்கள் மீது மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.

மத்திய அரசு மேற்கொண்ட முயற்சியின் காரணமாக கடந்த இரண்டரை ஆண்டுகளில் 708 இந்திய மீனவர்களை இலங்கை அரசு விடுவித்தது. இதேபோல், பாகிஸ்தான் அரசு 858 இந்திய மீனவர்களை விடுதலை செய் துள்ளது.

இலங்கைத் தலைநகர் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளும், பாகிஸ் தான் தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி களும் சிறைகளில் அடைக்கப் பட்டுள்ள இந்திய மீனவர்களுக்கு சட்ட உதவிகளை வழங்கி வரு கின்றனர்.

மீனவர்களின் அனைத்து பிரச் னைகளையும் தீர்க்கும் நோக்கில், இலங்கையுடன் இணைந்து மீன் பிடித் துறைக்கான கூட்டு பணிக் குழு அமைக்கபட்டுள்ளது என் றார் வி.கே.சிங்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner