எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜன.11 மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் தான் ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்க ரிசர்வ் வங்கி கமிட்டி பரிந்துரைத்ததாக நாடாளுமன்ற குழுவிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  மத்திய அரசு பழைய ரூ. 500, ரூ.1,000 நோட்டு கள் செல்லாது என கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அறிவித்தது. இதைத்தொடர்ந்து, ரூபாய் நோட்டு தடை விதிப்பதற்கு முன்பு யாரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது என்பது உள்ளிட்ட கேள்விகள் எழுந்தன.

இந்த நிலையில்  காங்கிரஸ் தலைவர் வீரப்பமொய்லி தலைமையிலான நாடாளுமன்ற நிதிக்குழு முன் 7 பக்க அறிக்கையை ரிசர்வ் வங்கி தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கள்ள நோட்டு, தீவிரவாதிகளுக்கு கிடைக்கும் நிதியை கட்டுப்படுத்த வும், கருப்பு பணத்தை ஒழிக்கவும் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த நவம்பர் 7ஆம் தேதி மத்திய அரசு ரிசர்வ் வங்கியை கேட்டுக்கொண்டது. இதற் காக பழைய ரூ. 500, ரூ.1,000 நோட்டு களை திரும்ப பெற ரிசர்வ் வங்கி ஆலோசிக்க வேண்டும் என  கோரிக்கை விடுத்தது. இதையடுத்து மறுநாள் ரிசர்வ் வங்கியின் மத்திய குழு உறுப்பினர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். அந்த குழு ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறலாம் என மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.

பரிந்துரை செய்யப்பட்ட சிறிது நேரத்தில், இதுதொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான அமைச்ச ரவை ஆலோசித்தது. இதன்பிறகே தடை விதிக்கும் முடிவை மத்திய அரசு அறிவித்தது.

கடந்த சில ஆண்டுகளாக கள்ளநோட்டு புழக்கத்தை ஒழிக்க அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய சீரியல் ரூபாய் நோட்டு களை வெளியிடுவது தொடர்பாக ஆலோசித்து வந்தோம். மேலும் அரசும் கருப்பு பண ஒழிப்பு, தீவிர வாதிகளுக்கு கிடைக்கும் நிதியை தடை செய்ய கேட்டுக்கொண்டதால் இந்த நடவடிக்கையை அரசு உடனடி யாக மேற்கொண்டது.

மேலும் கருப்பு பணம் பதுக்குப வர்கள் உயர்மதிப்பு நோட்டுக்களை தான் அதிகம் பதுக்குவதாக புல னாய்வு அமைப்புகளும், அமலாக்கத் துறையும் தெரிவித்திருந்தது. இதை யடுத்தே இந்த ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப் பட்டது.  முன்னதாக  பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரூ. 5,000, ரூ. 10,000 நோட்டு அறிமுகம் செய்யலாம் என 2014ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி மத்திய அரசுக்கு அறிவுறுத்தி யிருந்தோம். ஆனால் மத்திய அரசு இதற்கு பதிலாக ரூ.2,000 நோட்டு அறிமுகப்படுத்தலாம் என தெரிவித்து கடந்த ஆண்டு மே 27ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner