எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ரூபாய் நோட்டுக்கு தடை  முன் எந்தெந்த அதிகாரிகளுடன் ஆலோசனை?
தகவல் இல்லை என பிரதமர் அலுவலகம் பதில்

புதுடில்லி, ஜன.11 ரூபாய் நோட்டு தடை விதிப்பதற்கு முன்பாக எந்தெந்த அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார் என்ற கேள்விக்கு தங்களிடம் தகவலே இல்லை என பிரதமர் அலுவலகம் கூறி உள்ளது. மேலும், பல்வேறு ஆர்டிஅய் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் மறுத்துள்ளது.

உயர் மதிப்பு ரூபாய் நோட்டு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஅய்) கீழ் சமூக ஆர்வலர்கள் பலர் பல்வேறு கேள்விகளை கேட்டு வருகின்றனர். ஆனால், இதற்கு ரிசர்வ் வங்கியும், பிரதமர் அலுவலகமும் எந்த பதிலும் தராமல் மறுத்து வருகிறது.

இந்நிலையில், பிரதமர் அலுவலகத்துக்கு வந்த ஆர்டிஅய் மனு ஒன்றில், ‘‘ரூபாய் நோட்டு தடை விதிப்பது குறித்து எந்தெந்த அதிகாரிகளிடம் கருத்து கேட்டு பிரதமர் ஆலோசித்தார்?’ என கேட்கப்பட்டிருந்தது. அதற்கு பிரதமர் அலுவலகம், ‘‘அப்படி எந்த ஒரு தகவலும் இங்கில்லை’’ என பதில் கூறி உள்ளது.

அதே மனுதாரர், ‘‘ரூபாய் நோட்டு தடை குறித்து தலைமை பொருளாதார ஆலோசகர், நிதி அமைச்சரின் கருத்துகள் கேட்கப்பட்டதா? இதுதொடர்பாக உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டதா? அமைச்சரோ அல்லது உயர் அதிகாரிகளோ இந்த நடவடிக்கை மேற்கொள்ளும் முன்பாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார்களா? புதிய ரூபாய் நோட்டுகளை மாற்ற எவ்வளவு நாட்கள் தேவைப்படும் என ஏதாவது மதிப்பீடு செய்யப்பட்டதா?’ என்பது உள்ளிட்ட கேள்விகளை கேட்டிருந்தார்.

இந்த கேள்விகள் அனைத்தும் ஆர்டிஅய் சட்டத்தின் ‘தகவல்’ வரையறைக்குள் வராது எனக்கூறி பிரதமர் அலுவலகம் பதிலளிக்க மறுத்துவிட்டது. முன்னதாக இந்த கேள்விகளுக்கு ரிசர்வ் வங்கி பதிலளிக்க மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், ரூபாய் நோட்டு தடைக்கு பிறகு மக்கள் சிரமத்தை போக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? அறிவிப்பு அமலாவதற்கு முன்பாக அச்சடிக்கப்பட்ட புதிய நோட்டுக்களின் எண்ணிக்கை எவ்வளவு? என கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளிக்காத பிரதமர் அலுவலகம், நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் பிரிவுக்கு மாற்றி அனுப்பி வைத்துள்ளது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner