எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ரயில்வே (அய்ஆர்சிடிசி)க்கு
புதிய செயலி (மொபைல் ஆப்) அறிமுகம்

புதுடில்லி, ஜன. 11- ரயில் டிக் கெட் முன்பதிவுக்காக புதிய அய்ஆர்சிடிசி ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அய்ஆர்சிடிசி இணையதளம் மூலம் (ஆன்லைனில்) ரயில் பயணச் சீட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன.

மொபைல் மூலம் முன் பதிவு செய்வதற்கு அய்ஆர்சி டிசி ஆப்ஸ் உள்ளது. இதை எளிமைப்படுத்தி புதிய ஆப்சை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நேற்று அறிமுகம் செய்தார். அவர் கூறியதாவது:

தினமும் சராசரியாக சுமார் 10 லட்சம் பயணிகள் ஆன் லைனில் ரயில் டிக்கெட் முன் பதிவு செய்கின்றனர்.  இவர் கள் மொபைல் மூலம் டிக் கெட் முன்பதிவு செய்வதை எளிமைப்படுத்த, டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ஏற்ப புதிய மேம்படுத்தப்பட்ட அய்ஆர்சிடிசி கனெக்ட் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள் ளது. ஆன்டிராய்டு ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் இதை கூகுள் பிளே ஸ்டோ ரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

புதிய பாதுகாப்பு அம்சங் கள் நிறைந்த இந்த ஆப்சில் 40 வங்கிகள், இணைய வங்கி, கிரெடிட், டெபிட், மொபைல் வாலட்கள் மூலம் கட்டணம் செலுத்தலாம். அய்ஆர்சிடிசி இணையதளத்தில் புதிதாக பதிவு செய்பவர்களுக்கும் இது எளிதாக இருக்கும் என்றார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner