எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டெல்லி மெட்ரோ ரயிலில் அனுமதிபுதுடில்லி, ஜன. 8 பாலியல் பலாத்காரம் அதிகரித்துள்ளதை அடுத்து, டெல்லி மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பெண் பயணிகள் கத்தி வைத்துக்கொள்ள அனுமதிக் கப்பட்டுள்ளனர்.

டில்லியில் சில ஆண்டு களுக்கு முன் நிர்பயா என்ற புனைபெயர் சூட்டப்பெற்ற இளம்பெண் பாலியல் பலாத் காரம் செய்யப்பட்டு கொல்லப் பட்டார்.

இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி பெங்களுரில் ஏராளமான இளம் பெண்கள் பாலியல் அத் துமீறலுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டது. இது தொடர் பாக சிலர் கைது செய்யப்பட் டுள்ளனர். எனினும் பெண் களின் தற்காப்பை கருத்தில் கொண்டு சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது இன்றிய மையாதது.

இப்பின்னணியில் டில்லி மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பெண் பயணிகள் கத்தி வைத் துக் கொள்ளலாம் என்று அறி விக்கப்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்தும் உரிமை பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது சரிதான் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒரு தரப்பினர் இதற்கு ஆதரவாகவும், மற்றொரு தரப் பினர் இதற்கு எதிராகவும் வாதிடுகின்றனர். டில்லி மெட் ரோவில் கடந்தாண்டு நடை பெற்ற பிக்பாக்கெட் குற்றங் களில் 90 சதவீதத்தை செய்த வர்கள்  பெண்கள் தான் என்று மத்திய தொழில் பாதுகாப்பு படைவெளியிட்டுள்ள புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

டில்லி மெட்ரோவை தொடர்ந்து பெங்களுர், சென்னை உள் ளிட்ட இதர மெட்ரேரக்களிலும் கத்தி வைத்துக் கொள்ள பெண்கள் அனுமதிக்கப்படு வார்களா  என்று கேள்வி எழுந் துள்ளது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner