எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மாற்றுத் திறனாளிகளுக்கு கல்லூரிகளில்
5 சதவிகித இட ஒதுக்கீடு  

புதுடில்லி, ஜன.4 மாற்றுத் திறனாளிகளுக்கு உயர் கல்வியில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை அமல்படுத்தும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலோட் கூறியதாவது:

மாற்றுத் திறனாளிகள் உரிமை மசோதா கடந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதா ஏற்கெனவே அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அந்த மசோதாவை அமல்படுத்துவதற் காக, அதன் விதிமுறைகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணிகள் மும்முரமாக நடை பெற்று வருகின்றன.

ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதிக்குள் இந்தப் பணிகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

கடந்த குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட “மாற்றுத் திறனாளிகள் உரிமை மசோதா’வில், மாற்றுத் திறன் கொண்டவர்களுக்காக அரசுப் பணியிடங்களில் தற்போது வழங்கப்பட்டு வரும் 3 சதவீத இட ஒதுக்கீட்டை 4 சதவீதமாக அதிகரிக்க பரிந்துரைக்கப் பட்டுள் ளது. உயர்கல்வியில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை 3 சதவீதத்திலி ருந்து 5 சதவீதமாக அதிகரிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது 7 வகை உடல் குறைபாடுகளைக் கொண் டவர்களே சலுகை பெறுவதற் குரிய மாற்றுத் திறனாளிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலை யில், இந்தப் புதிய மசோதாவில் அந்த எண்ணிக்கை 21-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, புதிய வகை உடல் குறைபாடுகளையும் இந்தப் பட்டியலில் இணைக்க மத்திய அரசுக்கு இந்த மசோதா அனுமதி அளிக்கிறது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner