எழுத்துரு அளவு Larger Font Smaller Font

"பாவாணர் தோற்றம் தோற் றமே' யாம்! ஏற்றமேயாம்!''

காலம்காலமாகக்கட்டான உடற்பயிற்சி செய்த காளை யென்னப் பீடுமிக்க பெருமிதத் தோற்றம்! நெட்டை என்றோ குட்டை என்றோ காட்ட இய லாது அளவிட்ட உயரம்; ஒல்கி என்றோ தடியென்றோ உரைக்கவொண்ணா ஒத்தகனம்! கட்டி வயிரமென அமைந்து கண்டாரை மதிக்க வைக்கும் கவர்ச்சி! வனப்பான முகத்திற்கு வாய்த்த எடுப்பான மீசை! படித்து எழுந்தும் பயின்று சுரிந்த எழில் மிக்கசுருட்டைமுடி!பார்த்தஅள வில் வயப்படுத்தும் பளிச்சிட்ட பார்வை! புன்முறுவல் தவழும் இதழ்!குழந்தையெனக்குலுங்கிச் சிரிக்கும்நகைப்பு!நல்லொளிப் பிழம்பால்முல்லையரும்பை யடுக்கி வைத்ததென்னப்பல்! படிந்து விடாதும் நிமிர்ந்து விடாதும் அளவாய் அமைந்த செவி!''இவையெல்லாம்திரா விடமொழிஞாயிறு''பாவா ணர்பற்றிபுலவர் இளங்குமரனா ரின் எழுத்துச் சித்திரம் (நூல்: தேவநேயப் பாவாணர்).

மூத்த மொழி சமஸ்கிருதம் என்று சொல்வாரின் முகத்தி ரையைக் கிழித்தவர் பாவாணர்.

தமிழ்தென்னாட்டுமொழிக் கெல்லாம் தாயாயிருப்பது போன்றேசமற்கிருதம்வடநாட்டு மொழிக்கெல்லாம்தாய்என் றொரு தவறான கருத்து நெடுங் காலமாகவே நிலவிவருகின்றது.ஒரு காலத்திலும் உலக வழக் காய்வழங்காதஅரைச்செயற் கையானஇலக்கியக்கலவை மொழி, எங்ஙனம் தாய்மொழி யாயிருத்தல் கூடும்! ஒரு மொழி முதற்கண் தலைமொழி யாயிருந்தாலன்றோ பின்னர்த் தாய் மொழியாகவும் அமைதல் கூடும்!

தமிழ் திராவிட மொழிகட்குத் தாயும்,ஆரியமொழிகட்குமூல மாயிருக்கும்போது, அவ்வாரிய மொழிகளுள் ஒலியளவில் முழு வளர்ச்சி அடைந்த இந்திய செயற்கைக் கலவை மொழி யாகிய சமற்கிருதம் எங்ஙனம் உண்மையில் பன்மொழித் தாயா யிருத்தல் ஒல்லும்?''

- என்று ஆய்வின் அடிப் படையில் நிறுவிய திராவிட மொழியியல் ஞாயிறு பாவாணர். இந்தப் பட்டம் தந்தை பெரியார் அவர்களால் சேலத்தில் (1955) அளிக்கப்பட்டது.

தமிழ்த் தோற்றம் கி.மு. ஏறத்தாழ அய்ம்பதினாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டது. கொடுந்தமிழ்களுள், வடுகென் னும் தெலுங்கு திரிந்தது, கி.பி.10 ஆம் நூற்றாண்டு. கருநடம் என்னும் கன்னடம் திரிந்தது, கி.பி.6 ஆம் நூற்றாண்டு. சேரலம் என்னும் மலையாளம் திரிந்தது, கி.பி.13 ஆம் நூற்றாண்டு. ஏனைத் திராவிடங்கள் திரிந் தது,  இவற்றிற்கிடையும் பின்னும்'' என்று ஆய்வறிந்து அறைந் தவரும் பாவாணரே!

இன்று பாவாணர் பிறந்த நாள் (1902).

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner