எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பிந்து தங்கம் கல்யாணி, பாலக்காட்டில் அரசு மேல் நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்று கிறார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழை வதற்கு ஆதரவாகப் பிரச் சாரம் செய்தவர்களில் இவரும் ஒருவர். சபரி மலைக்குச் செல்ல முயன்ற அவருக்கு அனுமதி மறுக் கப்பட்டது. இந்த நிலையில் தன் 11 வயது மகளைச் சேர்ப்பதற்காக வித்யா வனம் பள்ளியை அணுகி னார். அவர்களும் பள்ளியில் சேர்த்துக் கொள்வதாக உறுதியளித்தனர். கடந்த வாரம் தனது மகளை அழைத்து கொண்டு பள் ளிக்குச் சென்றார்.

அங்கு 60 பேர் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தால், அவருடைய குழந் தைக்கு வாய்ப்பு மறுக்கப் பட்டது. இதேபோல் சபரி மலைக் கோயிலுக்குச் சென்றதற்காக, 38 வயது கனக துர்காவை அவரது மாமியார் அடித்து உதைத் தார். படுகாயம் அடைந்த கனகதுர்கா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனும திக்கப்பட்டார். சட்டத்தின் அனுமதியுடன் பக்தியின் உந்துதலில் கோயிலுக்குச் சென்றவர்களைச் சட்டமும் காக்கவில்லை; பக்தியும் காக்கவில்லை.

("பெண்" - 'தமிழ் இந்து' 20.1.2019)

மதம் - யானைக்குப் பிடித்தாலும் சரி,  மனித னுக்குப் பிடித்தாலும் சரி ஆபத்தாகத்தான் முடியும் என்பதற்கு அடையாளம் இந்த  சபரிமலை விடயம் ஒன்று போதாதா? கட வுளும், மதமும் மனித சமூகத்தை ஒன்றுபடுத்தாது - மனிதர்களைக் கூறு போடும் -  சமத்துவத்தைக் கசாப்புப் போடும்.

ஆண் - பெண் இரு வரையும் கடவுள் படைத் தார் என்று ஒரு பக்கத்தில் கூறிக் கொண்டு ஒரு கோயிலுக்குள் குறிப்பிட்ட வயது உடைய பெண்கள் போகக் கூடாது  என்பது முரண்பாடு அல்லாமல் வேறு என்னவாம்?

இவற்றை எல்லாம் அந்தக் கடவுளே வந்து சொன்னாரா? சொன்னார் என்றால் யாரிடம் சொன் னார்? எந்த பாஷையில் சொன்னார்? கடவுள் சொன் னதை எழுதி வைத்தவர்கள் யார்?

இந்தக் கேள்விகளை எல்லாம் எழுப்பினால் இவர்களின் ஆன்மீகப் பலூன் வெடித்துச் சிதறி விடும்.

கடவுளை மற - மனிதனை நினை!

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner