எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தீபாவளி என்ற மூடப் பண் டிகை காசையும், அறிவையும் பலியாக்கிய பின் ஒரு மாத இடை வெளியில் கார்த்திகைத் தீபம் என்ற மூடப்பண்டிகை வந்து குதித்து விடுகிறது.

மாதம் தவறினாலும் மடப் பண்டிகை மட்டும் தவறவே தவறாது. மீதம் இருக்கும் புத்தியையும், பொருளையும், பொழுதையும் நாசப்படுத்தவேண்டும் அல்லவா!

தீபம்' என்று சொல்லும்பொழுது திருவண்ணாமலையில் அருணா சலேசுவரர் கோவிலில் ஏற்றப்படும் தீபம்தான் பிரசித்தி' பெற்றது.

இந்தத் தீபத்துக்கான கதையைக் கேட்டால் வெட்கக்கேடுதான்.

பிரம்மா, விஷ்ணு என்ற இந்துக் கடவுள்களுக்கிடையே யார் பெரியவன் என்ற போட்டியில்!

மும்மலங்களையும் கடப்பது (ஆணவம், கன்மம், மாயை) மனி தனுக்கு மட்டும்தானா? கடவுளுக் குக் கிடையாதா?

இருவரும் குரங்கு அப்பம் பிரித்த கதையாக சிவனிடம் சென்றார்களாம். இருவருக்கும் ஒரு போட்டி வைத்தாராம் சிவன். என் உச்சியையும், முடியையும் முதலில் யார் கண்டுபிடித்துத் திரும் புகிறார்களோ, அவரே தான் சக்தி வாய்ந்த கடவுள் என்றாராம்.

பிரம்மா அன்னப் பறவை உருவெடுத்து மேல் நோக்கிச் சென்றாராம். விஷ்ணு வராக (பன்றி) அவதாரம் எடுத்துப் பூமியைத் துளைத்துக் கொண்டு சென்றாராம்.

(எல்லாம் தீபாவளி மூடக்கருத்து போன்றதுதான்) விஷ்ணு தோல் வியை ஒப்புக்கொண்டு திரும்பி விட்டானாம்.

மேலே சென்றபோது, ஒரு தாழம்பூ கீழ்நோக்கி வந்ததைப் பார்த்து, பிரம்மாவுக்குத் தோன்றிய யோசனையின் அடிப்படையில் தாழம்பூவே, தாழம்பூவே, நான் சிவனின் உச்சியைக் கண்டதாக சாட்சி சொல்வாயா?' என்று கேட்டுக்கொள்ள, தாழம்பூவும் ஒப்புக்கொள்ள சிவனிடம் பஞ்சாயத்து நடந்தபோது அது பொய்யென்று உணரப்பட்டு, பிரம்மாவுக்கு எங்கும் கோயில் கூடாது என்றும், தாழம்பூவை பூஜைக்குப் பயன்படுத்தக்கூடாது என்றும் யோக்கியன்' சிவன் சாபமிட்டானாம்! அதனால்தான் பிரம்மாவுக்குக் கோவில் இல்லை - தாழம்பூவும் பூஜையில் இடம்பெறு வதில்லையாம்.

இந்தப் பஞ்சாயத்து நடந் ததை முன்னிட்டு, திருவண்ணா மலையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை நாளில் சிவன் ஜோதி யாகத் தோன்றுவானாம். அதுதான் இந்தக் கார்த்திகைத் தீபமாம். (சிவன் தோன்றவில்லை, கோவில் நிருவாகத்தினர்தான் தீபம் ஏற்று கின்றனர்).

பொருளாதாரத்தில் உற்பத்தி நாசம் என்பதற்கு உதாரணம் இந்த மதப் பண்டிகைகள்தான். தீபாவளியில் காசைக் கரி யாக்கி முடிந்தவுடன் ஒரு மாத இடைவெளியில் இந்தக் கார்த்தி கைத் தீபம்.

3000 கிலோ நெய், 1700 மீட்டர் துணி, 1000 கிலோவிற்கு மேலாகப் பூஜைப் பொருள்கள். 50 கிலோ கற்பூரம் பாழாக்கப்படுகின்றன. சிறு பிள்ளை விளையாட்டு என்று பக்தியை வடலூர் இராமலிங்கனார் சொன் னது இதைத்தான்.

இந்திய அளவில் ஊட்டச் சத்து குறைபாடு (National Family And Health Service Report) உள்ளோர் 53 விழுக்காடு, தமிழ்நாட்டளவில் 28 விழுக்காடு.

இத்தகைய அவல நிலையில் இவ்வளவு சத்துள்ள உணவுப் பொருள்களையும் எரித்து நாசமாக் குகிறார்களே!

பக்தி வந்தால் புத்தி போகும்

புத்தி வந்தால் பக்தி போகும்!

என்றாரே தந்தை பெரியார் - எத்தகைய உண்மை.

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner