எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர்.

சிறு வயதில் கிணற்றுக்குள் கல்லைத் தூக்கிப் போட்ட போது அதிலிருந்து குமிழ், குமிழாக வந்த நிலையில், அது ஏன் அப்படி வருகிறது என்பதுதான் அவர் கேட்ட முதல் அறிவியல் கேள்வி.

1998 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதி பொக் ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தி உலக அரங்கில் தன்னை வல்லரசாக அறிவித்தது. இதற்கு அடித் தளம் அமைத்தவர்.

1958 இல் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் வேலைக்குச் சேர்ந்தபோது அவர் பெற்ற சம்பளம் ரூ.250.

இந்தியராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் ஆகிய ஏவுகணைகள் இவர் திட்ட இயக்குநராக இருந்தபோது வடிவமைக்கப்பட்டவையே!

போலியோ நோயாளிக ளுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இரு தய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை இவர் கண்டு பிடிப்பு.

அந்த ஸ்டெண்டுக்கு அவர் பெயரே சூட்டப்பட்டது.

இந்திய பாதுகாப்புத் துறையின் ஆய்வுக்கு முதலில் வெளிநாட்டுக் கருவிகள், பொருள்களை நீக்கி, முழுக்க முழுக்கஉள்நாட்டுப்பொருள் கள்மூலம் ஆய்வு பணி களுக்கு வித்திட்டவர்.

பள்ளிச் சிறுமியின் எது நல்ல நாள்? என்ற கேள்விக்கு சூரிய ஒளி பட்டால் பகல், படாவிட்டால் இரவு, இதில் நல்லது - கெட்டது எது என்று வினாவுக்கு வினாவாகவே பதில் அளித்தார்.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உரு வாக்கியபோது அமெரிக்கா உள்படபலநாடுகள்இவரை ஆச்சரியத்துடனும், மிரட்சியு டனும் பார்த்தன.

வல்லம்பெரியார்மணி யம்மைப் பல்கலைக் கழ கத்தின் உற்ற நண்பர். நகர்ப் புறங்களில் உள்ள வசதிகள் எல்லாம் கிராமப்புறங்களிலும் இருக்கவேண்டும் என்ற தந்தை பெரியார் அவர்கள் தொலைநோக்குத் திட்டத்தை வியந்து பாராட்டி அதற்குப் பெரியார் புரா (PURA - Providing Urban Fecilities to Rural Area) என்று பெயர் சூட்டியவர்.

மாணவனாக இருந்த போது அரசியலில் ஈடுபடும் தன் ஆர்வத்தை வெளி யிட்டபோது, தம்பி முதலில் படி, பின் நீ அரசியலுக்குப் போ!'' என்ற தந்தை பெரியாரின் அறிவுரையை ஏற்று அதன்படி ஒழுகியவர்.

இவர் யார் தெரியுமா?

பாரத ரத்னா அணு விஞ்ஞானி ஏ.பி.ஜே.அப்துல்கலாம்.

இன்று அவர் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்!

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner