எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஒற்றைப் பத்தி

ஆடி பவுர்ணமியாம் நாளை - சந்திரகிரகணம் இந்தியா முழு வதும் - இந்த நூற்றாண்டின் மிக நீளமானதாம். அது சரி, இயற் கையாக நடக்கக்கூடிய ஒன்று தானே!

அப்படியெல்லாம் விட்டுவிட முடியுமா மூடநம்பிக்கையை மொத்த குத்தகை எடுத்துக் கொண் டிருக்கும் வியாபாரிகளால்? மூட நம்பிக்கையோடு - இது போன்ற நம்பிக்கையிலிருந்து மக்களை வெளியேறாமல் வைத் திருந்தால்தானே பார்ப்பனர் களின் ஆதிக்கக் கப்பலின் பய ணம் தங்குத் தடையின்றி ஜாம் ஜாமென்று' நடைபெற முடியும்.

இன்றைய தினமலர்' - யாரோ ஒரு ஆன்மிகக் குருவாம் - அவரிடமிருந்து ஒரு செய்தியை வாங்கிப் போட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை பிறந்த வர்கள் கார்த்திகை, ரோகிணி, உத்தரம்,அஸ்தம்,பூராடம்,உத் திராடம்,திருவோணம்,அவிட் டம் நட்சத்திரத்தில் பிறந்த வர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். (கோவிலுக்குச் சென்று பார்ப்பானுக்குக் கொட்டியழ வேண்டும் என்பதுதான்).

ஜாதகத்தில் சூத்திர திசை, சந்திர புத்தி உள்ளவர்கள் கிர கணம் முடிந்த பின் கடல் அல்லது வீட்டிலேயே உப்பு சேர்ந்த நீரில் குளிக்கவேண்டும். அதிகாலை 4.30 மணிக்குமேல் சந்திரனைப் பார்க்கலாம்.

கர்ப்பிணிகள் சந்திர கிரகணத் தைப் பார்க்கக் கூடாது. இரவு 8 மணிக்குமுன் உணவு சாப்பிடுவது நல்லது என்று சும்மா சரடு விட்டுத் தள்ளியுள்ளார்.

விஞ்ஞான ரீதியாக இதற்கு எந்தவித ஆதாரமும் கிடையவே கிடையாது. சந்திரன் தனிக் கிரகமே இல்லை; பூமியின் துணைக் கிரகம்தான். ஆனால், ஜோதிடத்திலோ, நவக்கிரகப் பட்டியலில் துணைக் கிரகமான சந்திரனுக்கு இடம் உண்டு. மூலக் கிரகமான பூமிக்கு இடமில்லை.

சந்திர கிரகணத்தைவிடப் பெரிய விஷயம் சூரிய கிரகணம் தானே.22.7.2009 அன்று இதே போல அந்தக் கிரகணம் பேசப் பட்டது.

அந்தமூடத்தனத்தின்முக் காட்டைக் கிழித்தெறிந்து, விலா எலும்பை நொறுக்கும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஓர் அறிக்கை வெளியிட்டார் (21.7.2009). அதன்படி அன்று பெரியார் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் திறந்தவெளியில் சிற்றுண்டி சாப்பிட்டனர்.

சென்னை பெரியார் திடலில் அன்று காலை 6.15 மணிக்கு திராவிடர் கழகத் தோழர்களும், வளாகத்தில் பணியாற்றுவோரும் சிற்றுண்டி அருந்தினர். அந் நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களும்  பங் கேற்றார்.

தமிழ்நாட்டில் மற்ற மற்ற பகுதிகளிலும் திராவிடர் கழகம் இதனை அரங்கேற்றியது.

எதையும் திசை திருப்பி தங்கள் ஆதிக்கத் தொப்பையை நிரப்பும் பார்ப்பனர்களின் வலைகளில் சிக்காதீர்கள்!

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner