எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காமராசர் யார்?

தந்தை பெரியார் கருப்புச் சட்டைக்காரர்தான் - காமராசர் கதர்ச்சட்டைக்காரர்தான். அப்படி இருக்கும்பொழுதுபிள்ளைகளுக் குக் காமராஜர் என்று ஏன் பெயர் சூட்டினார் தந்தை பெரியார்?

இருவரையும் இணைத்தது எது? இதனை அவர்கள் இருவர் வாயாலேயே கேட்கலாம்.

தந்தை பெரியார் தமது 88 ஆம் ஆண்டு பிறந்த (1966) நாள் விடுதலை' மலரில் இவ்வாறு எழு தினார்.

நான் எனது இலட்சியத்தில் மனக்குறையை அடையவேண்டிய நிலைஇல்லாதவனாகஇருக்கி றேன். இதை 4, 5 மாதங்களுக்குமுன் காமராசர் மகிழ்ச்சியோடு வெளி யிட்டார். அதாவது  பெரியாருக்கு இன்று என்ன குறை? அவர் போட்ட பாதையில்தான் இன்று காங்கிரசு போய்க் கொண்டிருக்கிறது. அவர் எதற்கும் கவலைப்படவேண்டிய தேவையில்லை'' என்பதாகப் பேசி னார்.

இனி எனக்கேதாவது குறை கள் இருக்குமானால், அதுவும் மக்கள் இடையில் காணப்படும் கவலையற்ற தன்மையும், எதிரி களின் சூழ்ச்சிக்கு ஆளாகும் தன் மையும்பற்றித்தான்'' என்று தந்தை பெரியார் அவர்கள் எழுதினார்கள்.

தந்தை பெரியார்பற்றி காமராசர் என்ன சொல்லுகிறார்?

நீங்கள் மதிப்புக்குரிய பெரி யார் ஈ.வெ.ரா.வின் பெயரை வைத்துள்ளீர்கள். பள்ளத்தெரு என்ற பெயரை மாற்றி வைத்தது பொருத்தமானதே!

பெரியார் காங்கிரசின் தலை வராகவும், காரியதரிசியாகவும் இருந்தார். அப்பொழுதே ஜாதி களை ஒழிக்கவேண்டும் என்றார். பெரியார் காங்கிரசில் இருந்தபோது கேரளத்தில் வைக்கம் என்ற ஊரில்ஜாதிஇந்துக்கள்தாழ்த்தப் பட்டவர்களைக் கொடுமைப்படுத்தி னார்கள். அதனை எதிர்த்து பெரி யார் சத்தியாக்கிரகம் ஆரம்பித் தார். அப்பொழுது நான் ஒரு சிறிய தொண்டன்தான். பெரியாருக்கு அப்பொழுது என்னைத் தெரி யாது. அவர் பெரிய தலைவர்! இப்போதும் அவரை எனக்குத் தெரியாது (சிரிப்பு!) ஏதோ அவரை நான் பார்த்திருக்கிறேன் - வைக்கம் நகரில் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தை நடத்தி யதற்காக தமிழ்த்தென்றல் திரு.வி.க. பெரியாருக்கு வைக்கம் வீரர் என்று பட்டம் சூட்டினார்; பெரியார் எங்கள் சர்க்காரை ஆதரித்தார் என்றால், அவருடைய நோக்கம் நிறைவேறுவதால்தான்; பெரியார் என்னிடம் தினமும் இரவு ரகசியமாகப் பேசிக் கொண் டிருக்கிறார் என்கிறார்கள் (சிரிப்பு). நாங்கள் அப்படி சந்திக்கவில்லை. பெரியார் ஆதரவு தருகிறார் என்றால், நல்ல சீர்திருத்தங்கள் சர்க்காரால் கொண்டு வரப்படு வதுதான் காரணம்!''

(திருச்சி வரகனேரியில் பெரியார் நகர் வாயிலைத் திறந்து வைத்து காமராசர் பேசியது, நவசக்தி', 11.4.1961).

தகுதி - திறமை பித்தலாட்டம் என்று பேசினார் தந்தை பெரியார். இதுபற்றி காமராசர் என்ன சொல் கிறார்?

தகுதி - திறமை என்று சொல்லி கொஞ்ச நாளா ஏமாத்தினீங்க. 4,000, 5,000 வருஷமா ஏமாத்துகிறீர்கள். மந்திரம், தந்திரம் என்று சொல்லி ஏமாற்றுகிறீர்கள். இந்தத் தகுதி - திறமை சங்கதியை என்னுடைய இறுதிப் போராட்டமாக வைத்துக் கொள்ளப் போகிறேன்.''

(9.5.1965 அன்று திருச்சிப் பொதுக்கூட்டத்தில் காமராசர்)

பெரியார் யார்?

காமராசர் யார்? இப்பொழுது புரிகிறதா?

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner