எழுத்துரு அளவு Larger Font Smaller Font

எஸ்.தவமணிராசன்

ஒல்லியான உருவம் - காற்றடித்தால் பறந்துவிடுவாரோ என்றுதான் எண்ணத் தோன்றும். திராவிட மாணவர் கழகத்திற்குக் கால்கோள் போட்டவர் என்றால், எளிதில் நம்ப முடியாதுதான் உருவுகண்டு எள்ளற்க!' என்பது இவருக்குப் பொருந்தும். அவர்தான் தவமணிராசன்.

சிவகாசிக்காரர். பெற்றோர் வி.செந்தில் வேலாயுதம் - தெய்வ நேசம்மாள். 4 ஆவது பாரம் - அதாவது ஒன்பதாம் வகுப்புவரை சிவகாசியில் படிப்பு. தந்தையார் நகராட்சி ஆணையர் என்பதால், அவர் மாறுதலாகி செல்லும் ஊர்களுக்கெல்லாம் இவரும் செல்லவேண்டும்தானே - அந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம்; மன்னார்குடி ஃபின்லே உயர்நிலையில் படிப்பு, சுயமரியாதைச் சுட ரொளி மன்னை நாராயணசாமி எதிர்வீட் டுக்காரர் - விடுதலை' படிக்கும் தொடர்பு கிட்டியது.

விடுதலை' உள்ளத்தில் புகுந்தால் - அவ்வளவுதான். அந்த சிந்தனையிலிருந்து விடுதலை பெறுவது எப்படி? திருப்பூரில் இருந்தபோதுதான் அண்ணாமலைப் பல் கலைக் கழகத்தில் போய்ச் சேர்ந்தார் - பிற்காலத்தில் தமிழ்நாடு அரசின் கல்வித் துறை செயலாளரும், பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவருமான கா.திராவியம் அய்.ஏ.எஸ். உடன் பயின்றவர்.

ஆண்டுதோறும் அண்ணாமலை பல் கலைக் கழகத் தமிழ்ப் பேரவையின் சார்பில் காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுவது வழக்கம். பல்கலைக் கழக மாணவர் தவமணிராசன் என்ன செய்தார்? தமிழ்ப் பேரவை இயக்குநர் குழுவிடம் ஒரு தீர்மானத்தைக் கொடுத்தார். எம்.எல்.பிள்ளை என்று அந்தக் காலகட்டத்தில் பெரிதாகப் பேசப்பட்ட கா.சுப்பிரமணிய பிள்ளை அங்குத் தமிழ்த் துறைத் தலைவர். அந்தத் தீர்மானத்தை அவர் படித்தார்.

வடநாட்டு வணிகர் திரு.காந்தியவர்கள் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டுமென திரு.தங்கராசன் (புலவர் வகுப்பு மாணவர் நிர்வாகக் குழு உறுப்பினர்) தீர்மானம் கொண்டு வந்துள்ளபோது ஏன் தமிழ்நாடு பெரியாரின் பிறந்த நாளைக் கொண்டாடக் கூடாது?'' என்று தவமணிராசன் தீர்மானம் கொடுத்துள்ளார் என்று தன் கருத்தையும் வெளியிட்டார். முடிவில் காந்தி ஜெயந்தி, பெரியார் நாள்'' கொண்டாட தீர்மானிக்கப்பட்டது.

எவ்வளவு நயமாக இலகுவாக, தான் நினைத்ததை சாதிக்கக் கூடியவர் தவமணி ராசன் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டே!

சும்மா இருக்கமாட்டாரே - சுறுசுறுப்பாக எதையாவது செய்துகொண்டே இருப்பார். விளைவு பல்கலைக் கழகத்திலிருந்து கல்தா கொடுக்கப்பட்டார்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் அ.சிதம்பரநாதன் கொடுத்த பரிந்துரைக் கடிதத்துடன் கும்ப கோணம் அரசினர் கலைக் கல்லூரியின் முதல்வர் கே.சி.சாக்கோவைச் சந்தித்தார் - பி.ஏ.யில் இடம் கிடைத்துவிட்டது.

அவர் குடந்தை கல்லூரியில் சேர்ந்த தருணம் - நடந்த ஒரு நிகழ்ச்சி அவரை ஒரு போராட்ட வீரராக்கிற்று. கல்லூரி விடுதியில் பிராமணர்''களுக்கென்று தனித் தண்ணீர்ப் பானையாம்; இண்டர் மீடியட் முதலாமாண்டு படித்த சம்பந்தம் என்ற மாணவர் அந்தத் தண்ணீர்ப் பானையில் தண்ணீர் குடிக்க, ஏதோ பிரளயம் ஏற்பட்டதுபோல ஆரியம் துள்ளிக் குதித்தது - கல்லூரி வார்டன் கணேசய்யர் ஒரு ரூபாய் அபராதம் விதித்தார்.

தவமணிராசன், கருணானந்தம் உள் ளிட்ட தோழர்கள் போர்க்கொடி உயர்த்த - அபராதம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இத னுடைய தொடர்ச்சியாகக் கருக்கொண் டதுதான் திராவிட மாணவர் கழகம் (1.12.1943). அதற்கு அடிக்கல் நாட்டியவர் செ.தவமணிராசன் பெரும்பாலும் எவரையும் டா' போட்டுத்தான் பேசுவார் - யாரும் வருத் தப்பட மாட்டார்கள். அந்த அளவு உரிமை எடுத்துக்கொள்ளத் தகுதி படைத்தவர் என்றே அதனைப் பெருமையாகத்தான் கருதுவார்கள்.

வரும் 8 ஆம் தேதி திராவிட மாணவர் கழகத்தின் பிரசவ அறையான அதே குடந்தையில் அதன் பவள விழாவை (75 ஆம் ஆண்டு) நடத்தும் எண்ணம் நமது தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் எண்ணத்தில் கருக்கொண்டதுதான் எத்தனைச் சிறப்பு!

திராவிட மாணவர் கழகத்தைப் பெற் றெடுத்த அந்தக் கால மாணவர்களான சுய மரியாதைச் சுடரொளிகளுக்கு வீரவணக்கம்! வீர வணக்கம்!!

- மயிலாடன்

குறிப்பு: 6.6.1990 அன்று விடுதலை' ஆஃப்செட்டில் அச்சிடப்பட்ட தொடக்கக் காலகட்டத்தில் சில மாதங்கள் பெரியார் திடலில் மானமிகு தவமணிராசன் அவர்கள்  தங்கி ஆலோசனைகளை வழங்கியதும் நினைவு கூரத்தக்கதாகும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner