எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜனனிராஜகோபால்என்ப வர் தனது டிவிட்டர் பதிவில் என்னுடையஜோதிடகணிப் பின்படி, எடியூரப்பா பெரும் பான்மையை நாளை நிரூபிப்பார் என்று எடியூரப்பாவின் படத் துடன் 18.5.2018 பகல் 12.30 மணி யளவில் பதியவிட்டிருந்தார்.

கருநாடகா அரசியலில் பாஜகவினர் எதிர்பார்த்திராத திருப்பங்கள் ஏற்பட்டதையடுத்து, அப்பதிவை இளவேணி என்பவர் ஒருவர் பகிர்ந்து, வெட்கங்கெட்ட ஜோதிடக்கணிப்பு என்று டிவிட் டரில், தம் கருத்தை பதியவிட்டார். சமூக ஊடகங்களில் அதுபோன்ற ஜோதிட விமர்சனக் கருத்துகள் வெளியானதை அடுத்து, ஜோதி டக்கணிப்பு பதிவை ஜனனி ராஜகோபால் நீக்கிவிட்டார்.

டிவிட்டர் பதிவில்,

நான்தான் அடுத்த முதல் வர் என்று ஜோதிடர்கள் சொல் கிறார்கள் என்று வாட்டாள் நாகராஜ் கூறுகின்ற செய்தியை டிவி -9 என்ற கன்னட தொலைக் காட்சி  வெளியிட்டது.  எடியூரப்பா வெல்வார் என்று கூறிய ஜனனி ராஜகோபால், வாட்டாள் நாகராஜ் முதல்வர் எனும் செய்திப் பதிவையும் டிவிட்டர் சமூக ஊடகத்தில் பகிர்ந் துள்ளார்.

டிவிட்டர் சமூக வலைத்தளப் பக்கத்தில் ஜோதிடக் கணிப்பை வெளியிட்டு வருகின்ற ஜனனி ராஜகோபால், தன்னுடைய பதி வாக எடியூரப்பா பெரும்பான்மை நிரூபிப்பார் என்றும், அதேநேரத் தில் வாட்டாள் நாகராஜ் முதல் வர் என்று ஜோதிடர்கள் கூறு கிறார்கள் என்று அவர் கூறும் செய்தியையும் பகிர்ந்துள்ளார் என்றால், அவர் கூற்றுப்படி, இரு வரும் முதல்வர்கள் ஆவார்கள் என்பதைத்தவிர வேறு என்ன?

ஆனால், ஜனனிராஜகோபா லின் ஜோதிடக்கணிப்பைப் பொய் யாக்கிய செய்தி என்னவென்றால், எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப் பையே எதிர்த்து பதவி விலகி னார். வாட்டாள் நாகராஜ் தோல்வி அடைந்ததுடன், வைப்புத் தொகையையும் இழந்தார் என்பது தான்.

இளவேணி குறிப்பிட்டதைப் போல, அட, வெட்கங்கெட்ட ஜோதிடமே! என்றுதான் பகுத்தறி யும் எவரும் கூறுவார்கள்.

பச்சையான பார்ப்பனீய மூடத்தனக் கொடூர சுரண்டலே ஜோதிடம் என்பதற்கு இதற்கு மேலும் எடுத்துக்காட்டு தேவைப் படுமோ?

இதற்குப்பிறகாவதுஜோதி டரின் கூற்றுப்படி இன்னின்ன நிறத்தில் உடை அணியும், மோதிரம் அணியும், பெயர் களில்எழுத்துகளைக்கூட்டிக் கொள்ளும் அல்லது குறைத்துக் கொள்ளும் ஆசாமிகள் அறிவுத் தெளிவு பெறுவார்களா?

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner