எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ஆணின் பாதுகாப்பு இல்லாமல் பெண்ணால் பிறப்பில் இருந்து இறப்பு வரை இருக்க முடியாது, பிறப்பில் இருந்து தந்தையும், திரு மணத்திற்குப் பின் கணவனும், வயதான பிறகு மகனும் தான் பெண்களை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நம் சாஸ்திரங்கள் சொல்கின்றன. இதன்மூலம் ஒரு பெண்ணுக்குச் சுயமாக, சுதந்திரமாக இருப்பதற்கான திறன் இல்லை என்று தெரிகிறது!'' இவ்வாறு கூறியிருப்பவர் உத்தரப்பிரதேச முதல்வர் சாமியார் ஆதித்யநாத்.

(உத்தரப்பிரதேசத்தில் இருந்த 13 காவல்துறை பெண் உயரதிகாரிகளை ஆட்சிக்கு வந்த பிறகு போலீஸ் மெஸ் மேற்பார்வையாளராகவும்,  சீருடை பணியாளர்துறை துணை நிர்வாகியாகவும், இதர பலவற்றிற்கும் உதவாத பிரிவுகளுக்கு அனைத்துப் பெண் காவலதிகாரிகளையும் தான் ஆட்சியில் அமர்ந்த சில மாதங்களில் மாற்றி சாதனை படைத்தார்.) சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் அனைத்து மாவட்டங்களுக்கான 743 காவல்துறை உயரதிகாரிகள் பட்டியல் வெளியானது. அதில் இசுலாமிய தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் யாருமே இல்லை, அதேபோல் பெண் காவல்துறை அதிகாரிகளின் பெயரும் இல்லை. மாயாவதி ஆட்சிக் காலத்தில் 103 காவல்துறை பெண் உயரதிகாரிகள் இருந்தனர். அகிலேஷ் ஆட்சிகாலத்தில் 88 காவல்துறை பெண் உயரதிகாரிகள் இருந்தனர். இப்போது ஒருவர் கூட இல்லை  உ.பி. முதல் அமைச்சர் சாமியார் ஆதித்யநாத்கூறியிருப்பதுஅவர்தம் சொந்தக் கருத்தல்ல - அவரே கூறிய படி சாஸ்திரங்கள் அவ்வாறுதான் கூறுகின்றன.

அவர் கூறியிருப்பது மனுதர்ம சாஸ்திரம், அத்தியாயம் 5, சுலோகம் 148 ஆகும்.

ஓர் உண்மை இப்பொழுது உறுதியாகிவிட்டது.பிஜேபிஆட்சி என்றால் அசல் மனுதர்மராஜ்யம் தான்  என்று நாம் சொல்லும் பொழுதெல்லாம் அதனை உணராத வர்கள்கூட உ.பி. முதலமைச்சரின் கூற்றைப் படித்தபின் நமது கூற்று நூற்றுக்கு நூறு சரியானதே என்பதை ஒப்புக் கொள்வார்கள்.

மனுதர்மத்தையும் தாண்டி கீதை பெண்களை இழிவுபடுத்துகிறது. பெண்களும், வைஸ்யர்களும், சூத் திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள்!'' (கீதை அத்தியாயம் - 9 சுலோகம் 32).

உ.பி. முதலமைச்சர் சொல்லுவது ஒருபுறம் இருக்கட்டும்; ஆர்.எஸ்.எஸின் அகில இந்தியத் தலைவர் மோகன் பாகவத் பெண்களைப்பற்றி என்ன கூறி வருகிறார்?

இந்தூரில் ஆர்.எஸ்.எஸ். பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் என்ன கூறினார்?

இன்று பெண்கள் அதிகம் கல்வி கற்க ஆரம்பித்து விட்ட னர்.திருமணத்தின்போதுகணவன், மனைவி இருவரின் கல்வியும் சரி சமமாக இருந்து வருகிறது; சில வேளைகளில் கணவனைவிட மனைவி அதிகம் படித்தவளாக இருக்கிறாள் அல்லது திருமணத் திற்குப் பிறகு படித்துப் பட்டம் பெற்று விடுகிறாள். சிலர் கணவனைவிட  அதிகம் படித்தவளாக இருக்கிறார்கள். சிலர் கணவனைவிட உயர் பத விக்குச் சென்று விடுகிறார்கள். வருமானமும் கணவனைவிட அதிகம் வரத் துவங்கி விட்டது. இந்த இடத்தில் கணவனின் மன நிலைக்கு ஏற்ப நடக்காத சூழல் மனைவிக்கு ஏற்பட்டு விடும்; இங்கு ஈகோகவும் தோன்றி விடுகிறது. இந்த ஈகோ தான் இந்தியாவில் தற்போது நடக்கும் அதிகமான விவாகரத்திற்குக் கார ணமாக அமைந்து விடுகிறது.

மனைவி என்பவள் கணவனின் தேவைகளை நிறைவேற்றவேண்டும், வீட்டைக் கவனிக்கவேண்டும்,  கண வனுக்கு இன்பம் தரவேண்டும். இல்லாவிட்டால் திருமண ஒப்பந் தத்தை முடித்துவிட வேண்டும்'' என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் (AAJTAK -  -  இந்தி நேரலை) கூறினாரே!

அது மட்டுமா? பாரதத் தில் கற்பழிப்பு இல்லை, இந்தியாவில்தான் கற்பழிப்பு நடக்கிறது'' என்று சொன் னவரும் சாட்சாத்' இதே ஆர்.எஸ்.எஸ்.  தலைவர்தான்.

இவர் கூற்றையும் - உ.பி. முதல்வரின் கருத்தையும் ஒப்பிடுக - உண்மைப் புரியும்.

- மயிலாடன்

குறிப்பு: பாலியல் சமத்துவத் தில் உலகில் இந்தியாவின் இடம் 108.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner