எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

""ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 'அதிகமான மக்கள் சபரிமலைக்குப் போக விரதம் இருப்பதால் சாராய வியாபாரமே குறைகிறது' என்று கூறியிருக்கிறார். பகுத்தறிவு இதைச் செய்ய முடியாது. பகுத்தறிவுப் பகலவர்கள் கூறியவற்றையெல்லாம் மக்கள் புறக்கணித்ததால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது. கண்ணை மூடிக் கொண்டு பகுத்தறிவு பேசும் வீரமணி போன்றவர்கள், கண்ணைத் திறந்து என்ன நடக்கிறது என்று பார்த்தால், அவர்களுக்கு எந்த அளவுக்குப் பகுத்தறிவுப் பகலவரான பெரியாரின் ஆன் மிக விரோதச் சிந்தனைகளை மக்கள் ஒதுக்கி விட்டார்கள் என்பது புரியும். தூங்குப வர்களை எழுப்பலாம். ஆனால் தூங்குவதுபோல் இருப்பவர் களை எழுப்புவது கடினம். இதுதான் தமிழக பகுத்தறி வாளர்களின் நிலை"" என்று ஏடெடுத்து அப்படியே பொரிந்து தள்ளியுள்ளார் 'சோ'வின் வாரிசாக 'துக்ளக்'கின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றி ருக்கும் திருவாளர் எஸ். குரு மூர்த்தி அய்யர்வாள் ('துக்ளக்' 24.1.2018 பக்கம் 37).

தந்தை பெரியார் அவர் களின் தனியொழுக்கமும், பொது ஒழுக்கமும் எத்தகையது என்பது இந்த நாட்டுக்கே விளங்கும்.

அதே நேரத்தில் குருமூர்த்தி அய்யர் கூட்டத்தின் லோகக் குரு திருவாளர் ஜெயேந்திர சரஸ்வதியின் தனி ஒழுக்கமும், பொது ஒழுக்கமும் உலகப் பிரசித்தி பெற்றதல்லவா!

குருமூர்த்தி அய்யர்வாளின் அக்கிரகார வாசியான பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் கண்ணீரும், கம்பலையுமாக தொலைக்காட்சிகளில் குமுறி னாரே அதனை மறந்துவிட முடியுமா!

பத்திரிகை தொடங்குவது தொடர்பாக தன்னை அழைத்த நிலையில் காஞ்சி சங்கர மடத் திற்குச் சென்றபோது தனது கையைப் பிடித்து இழுத்தார் காஞ்சி லோகக் குரு ஜெயேந்திர சரஸ்வதி  என்று கூறிய அக்கிரகார எழுத்தாளர் பெண் மணியின் துயரக் குரல் குரு மூர்த்திகளின் மனச் சான்றை (?) உலுக்காது.

அவ்வாறு அனுராதா அழுது புரண்டபோது - அந்த அம்மையார் மீதே அபாண்ட பழி சுமத்திய அசகாய சூரரா யிற்றே திருவாளர் குருமூர்த்தி வாள்!

மானங்கெட்டு, மரியாதை கெட்டு மக்கள் மத்தியில் சிரிப் பாய் சிரித்தாலும் அவாளுக்கு ஜெயேந்திரர் ஜெகத்குருதான்!

தெரிந்து கொள்வீர் அவா ளின் அநாகரிக ஒழுக்கமுடை நாற்றத்தை.

- மயிலாடன்

குறிப்பு: பட்டப் பகலில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அதன் மேலாளர் சங்கரராமன் படுகொலை செய் யப்பட்டாரே அந்த சங்கரராமன் (சோம சேகர கனபாடிகள்) பதிவு செய்த ஜெயேந்திரரின் சரச சல்லாபங்கள் இன்னும் உயி ரோடு இருக்கத்தான் செய் கின்றன.

Comments  

 
#1 Eswarakannan T 2018-01-26 22:58
உண்மை தான் மக்கள் இதை புரிய வேண்டும்
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner