எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாபா சாகேப் அண்ணல் அம்பேத் கர்பற்றி - தந்தை பெரியாரின் ‘குடிஅரசு’ இதழ் (30.9.1944) அம்பேத்கர் பேச்சின் ஒரு பகுதியைஎடுத்துக்காட்டிஎழுதுகிறது.

‘‘ஒரு கூட்டத்தார் சென்னை மாநக ராட்சியில் எனக்கு வரவேற்புக் கொடுக் கச் சம்மதிக்கவில்லை என்பது எனக்குத் தெரியும். அதற்கு ஆகவே இந்த வர வேற்பைப் பெற நான் மகிழ்ச்சி அடை கிறேன். ஏன் எனில், இந்த வரவேற்பு, சடங்குமுறை வரவேற்பல்ல என்பதும், எனக்கு வரவேற்புக் கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்பவர்கள் பிடிவாத மாய் இருந்து, மெஜாரிட்டியாய் இருந்து வெற்றி பெற்று எனக்குக் காட்டிய அன் பென்றும் கருதுவதால் நான் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்றார்.

அடுத்தாற்போல் தேசியப் பித்த லாட்டத்தைப் பட்டவர்த்தனமாக்கினார். என்னவெனில்,

‘‘தேசிய சர்க்கார் என்றால், பார்ப் பனச் சர்க்கார்தானே. 1937 இல் தேசியம் வெற்றி பெற்ற 7 மாகாணங்களும் பார்ப் பன முதல் மந்திரிகள் ஆதிக்கத்தில் தானே இருந்து வந்திருக்கிறது. நாளைக்கு எல்லா மக்களுக்கும் ஓட்டுக் கொடுத்து அதன்மூலம் ஒரு சர்க்காரை ஏற்படுத்தி னாலும் அதிலும் பார்ப்பனர்கள்தானே ஆட்சி செலுத்துவார்கள்? இது மாத் திரமா? பெண்களுக்கு ஸ்தானம் வழங் கினாலும் பார்பாத்திகளே மெஜாரிட்டி யாய் வருகிறார்கள்; தொழிலாளருக்கு ஸ்தானம் வழங்கினாலும் அதற்கும் பார்ப்பனர்களே பிரதிநிதிகளாய் வருகி றார்கள். இது மாத்திரமா? தீண்டாத வகுப்பாருக்கு  ஸ்தானம் வழங்கினாலும் அதிலும் பார்ப்பனர்கள் பிடித்து வைக் கிற ஆள்கள்தான் வருகிறார்களே தவிர, வேறு யார் வருகிறார்கள்? ஆகவே,  தேசிய சர்க்கார் என்னும் பித்தலாட்டத் திற்கும், இந்த நாட்டின் மானக்கேடான அரசியல் நிலைக்கும் இந்த உதாரணம் போதாதா?’’ என்று பேசுகிறார்.

இதற்கு பார்ப்பனர்களாகட்டும், தேசியர்கள் தானாகட்டும் என்ன பதில் சொல்லக்கூடும்? ‘‘நான்சென்ஸ், ரப்பிஷ்’’ என்று குரைத்துத் தங்கள் அயோக்கியத் தனங்களை மறைக்க முயற்சிக்கக் கூடுமே ஒழிய, வேறு என்ன சமாதானம் சொல்ல முடியும்? ‘‘சுயமரியாதை இயக் கம் இல்லாவிட்டால்’’ இதெல்லாம் (இப்படி பார்ப்பனர் வெற்றி பெற்றது) ‘‘கடவுள் செயல், அந்தராத்மா கட்டளை’’ என்று சொல்ல முடியும். இப்போது தலை யைக் கவிழ்ந்துகொள்ள வேண்டியதைத் தவிர, இதற்கு வேறு பதில் இல்லை.

தேசியர்களின் தன்மை இப்படி என்றால், பார்ப்பனரல்லாத கட்சியார் என்று தங்களைச் சொல்லிக் கொண்டு ஒரு நல்ல கொள்கையையும், பொறுப் பையும் பாழ் அடையும்படி தங்கள் சுயநலத்தையும், வயிறு வளர்ப்பையும், பட்டம், பதவி, உத்தியோகம் முதலிய வைகளை மாத்திரம் வேட்டை ஆடு வதில் மூழ்கிக் கொண்டு மற்றவர்கள் தங்களைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்ற கவலையற்ற அதிதீவிர சுயநலக் காரர்களுக்கு சரியான சவுக்கடி கொடுத் துச் சிறிதாவது உறைக்கும்படிச் செய்தி ருக்கிறார்கள். இதற்கு உதாரணமாகக் கன்னிமாரா ஓட்டலில் அம்பேத்கரின் ஆசிபெற விருந்து கொடுத்து ஏமாற்ற நினைத்த சென்னைத் தோழர்களுக்கு டாக்டர் வலியுறுத்திய அறிவுரையைக் கவனித்தால் விளங்கும்.

‘‘பார்ப்பனரல்லாத தோழர்களே, உங்களை நீங்கள் பார்ப்பனரல்லாதார் என்று சொல்லிக் கொள்ளுகிறீர்களே அதில் உங்களுக்கும், பார்ப்பனர்களுக் கும் உள்ள பேதத்தைக் காட்டுவதற்குள்ள காரியங்கள் என்ன? அதற்கும், உங்கள் கொள்கை என்ன? திட்டங்கள் என்ன? ‘‘எங்கள் கட்சி பார்ப்பனியத்திற்கும் மாறான கட்சி’’ என்று சொல்லிக் கொண்டு நெற்றியில் நாமம், வீட்டில் பார்ப்பனப் புரோகிதம், நடவடிக்கையில் பார்ப்பனியத்தைப் பின்பற்றுதல், அவன் பூசை பண்ணும் கோவிலில் சென்று வெளியில் இருந்து வணங்குதல் ஆகிய வைகளைச் செய்து உங்களையும் 2 ஆவது வகுப்புப் பார்ப்பனர் மாதிரி ஆக்கிக் கொண்டு, முதலாவது வகுப்புப் பார்ப்பானாக ஆவதற்கு ஏற்ற வண்ணம் நடந்துகொண்டு வருவீர்களானால் நீங்கள் எந்தத் தன்மையில் பார்ப்பனரல் லாதார் என்று சொல்லிக் கொள்ள அரு கர்கள் ஆவீர்கள்?’’ என்று கேட்கிறார் அம்பேத்கர்.

இது இன்றைக்கும் பொருந்தும் தானே! இன்று அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் (1956)

- மயிலாடன்



.
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner