எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

அறிஞர் அண்ணா பரதன் என்ற புனைப் பெயரில் கட்டு ரைகளைத் தீட்டியவர். அத னைக் காப்பியடித்து ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜயபாரதத்தில்’ (8.9.2017) பரதன் பதில்கள் என்று எழுதிக் கொண்டுள்ளனர். அவர் களுக்கு ஏது சொந்த புத்தி?

கேள்வி: ஸ்ரீ “பகவத் கீதை” உணர்த்துவது என்ன?

பதில்: "என்னைச் சரண டைந்து விடு... சகலத்தையும் என்னிடம் விட்டு விடு... நான் பார்த்துக் கொள்கிறேன்" என் கிறார் கிருஷ்ணன்.

இதுதான் பதில்! ‘விஜயபார தம்’ பதில் சொல்லியிருக்கிறதே  அதன்படிதான் ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி சங்பரிவார்க் கூட்டத் தினர் எந்த வேலையையும் செய் யாமல் அனைத்தையும், கிருஷ்ணனிடம் சரணடையச் செய்து விட்டு வீட்டில் தூங்கிக் கொண்டு இருக்கிறார்களா? பாபர் மசூதி இடிக்கப்பட்ட  இடத்தில் ராமன் கோயிலை உருவாக்கும் வேலையைக் கிருஷ்ணன் பார்த்துக் கொள்ள மாட்டானா? ஏனிந்த இரட்டை வேடம்?

கிருஷ்ணன் அது மட்டுமா சொன்னான்? சண்டையைப்  போடுங்கள் - கொலை செய் யுங்கள் - அப்படிக் கொலை செய்யப்பட்டாலும் அவன் உடல் அழிக்கப்படுகிறதே தவிர, ஆன்மா சாகடிக்கப்ப டுவதில்லை. காரணம் ஆன்மா அழியாதது என்று சொன்னான் கிருஷ்ணன் என்பதை ஏற்றுக் கொண்டால் கொலை என்பது குற்றமில்லை என்றாகிட வில் லையா?

கேள்வி: கிருபானந்த வாரியார் பற்றி உங்கள் கருத் தென்ன?

பதில்: 63 நாயன்மார்கள் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ வில்லை. ஆனால் வாரியாரை நமது காலத்தில் வாழ்ந்த 64ஆவது நாயன்மாராகப் பார்க்கிறோம். ஈ.வெ.ரா. கும்பல் ஒரு பக்கம் நாத்திகப் பிரச் சாரத்தை முடுக்கி விட்டிருந்த காலத்தில் மூலை முடுக்கெல் லாம் சென்று, தனது ஆன்மிகப் பிரச்சாரத்தால் நாத் திகப் பிரச்சாரத்தை நீர்த்துப் போகச் செய்தவர் வாரியார்.

இது ‘விஜயபாரதத்தின்’ பதில்! அதே வாரியார் பக்தி பற்றி என்ன சொல்லியிருக் கிறார்? அதையும்தான் பார்ப் போமே!

கேள்வி: நம் நாட்டில் இறை யுணர்வு குறைந்து வருகிற தோ...?

வாரியார்: என் அனுப வத்துல சொல்றேன்.. .பக்தி அதிகமாயிக்கிட்டிருக்கு... கோயிலுக்குப் போறவங்க எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கிட்டே இருக்கு!

பழனியில் எம். பெருமான் கோயில் உண்டியலில் முன் னாடியெல்லாம் அஞ்சு லட்சம், ஆறு லட்சம் ரூபாதான் வந்திச்சு! இப்பவோ காணிக் கைத் தொகை ரெண்டு மூனு கோடியைத் தாண்டிடுது. பக்தி அதிகமாயிருக்கு... ஆனால் ஒழுக்கம்தான் குறைஞ்சு போயிருச்சு!

கேள்வி: இறைவனிடத்தில் மக்களுக்குப் பக்தி அதிகமாக இருக்கிறதென்றால் ஒழுக் கமும் இருக்கிறதென்று கொள் ளலாமே?

வாரியார்: ஊ ஹூம்.. அப்படியில்லை... பக்திக்கும் ஒழுக்கத்துக்கும் சம்பந்தமே யில்லை. (‘ஆனந்தவிகடன்’ 22.12.1991).

ஆர்.எஸ்.எஸ். வார இத ழான ‘விஜயபாரதம்’ யாரைத் துணைக்கழைத்து நாத்திகர் களுக்கு எதிராகக் வரிந்துகட்டி யாரைக் காட்டி காயை நகர்த் தியதோ, அதே வாரியார்தான் ‘விஜய பாரதக்’ கூட்டத்தின் தலையில் ஒரு குட்டுக் குட்டி, நெற்றியிலும்,  பக்தி யோக்கிய தையின் முகத்திரையையும் கிழித்துக் காட்டி விட்டாரே! போதுமா? இன்னும் வேண் டுமா?

- மயிலாடன்



.
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner