எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பக்தி முத்தினால் சில முட்டாள் தனமானக் காரியங்களில் பலர் ஈடு படும் சம்பவம் அடிக்கடி நடப்பதுண்டு. அவர் மட்டுமின்றி சுற்றியிருக்கும் மக்களையும் முட்டாள்களாக்கி விடு வார்கள். இந்த வகையில் தெலங்கானா மாநிலத்திலும் ஒரு நிகழ்வு!

தெலங்கானா மாநிலம் ஜங்கான் மாவட்டம் பெம்பர்த்தி கிராமத்தைச் சேர்ந்தவர் லக்கான் மனோஜ். சாமியார். சிவ பக்தரான இவர் தனது கனவில் சிவன் தோன்றி தனக்குக் கோவில் கட்டுமாறு  தெரிவித்ததாக கிராம மக்களிடம் தெரிவித்தார். குறிப்பிட்ட இடத்தில் கோவில் கட்ட சிவலிங்கம் பூமியில் புதைந்திருப்பதாக மனோஜ் தெரிவித்துள்ளார்.

இவரது பேச்சை நம்பிய கிராம மக்கள் நூறு பேர் சிவனை தரிசனம் செய்ய தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறைந்த பகுதியில் பள்ளம் தோண்டினர். வாராங்கல் - அய்தராபாத் இடையிலான நெடுஞ்சாலையின் மய்ய பகுதியில் பள்ளம் தோண்டுவதற்கு முன்பு சிறப்புப் பிரார்த்தனை நடத்தப்பட்டுள்ளது.

30 வயதாகும் மனோஜின் பேச்சை நம்பி ஜேசிபி எந்திரங்கள் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடந்தது.

கிராம நாட்டாண்மை, ஜங்கோன் நகராட்சிதுணைத்தலைவர்ஆகி யோரும் இந்த பணியில் ஈடுபட்டுள் ளனர்.

இது குறித்து நாட்டாண்மை கூறு கையில்,

‘‘மனோஜ் ஒரு தீவிர சிவ பக்தர். கடந்த 3 ஆண்டுகளாக இந்தக் கனவு குறித்து கூறி வருகிறார்; கோவில் கட்டவும், சிவலிங்கத்தைத் தோண்டி எடுக்கவும் உதவி செய்யுமாறு கோரி னார். வாரந்தோறும் திங்கள் கிழமை அன்று குறிப்பிட்ட இடத்தில் அவர் பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தார்; மனோஜ் பேச்சை நம்பி நாங்கள் இங்கே கூடியுள்ளோம்‘’ என்றார்.

இவர்கள் சாலையின் மத்தியில் சுமார் 20 அடி ஆழத்திற்குப் பள்ளம் தோண்டி விட்டனர். ஆனால் சிவ லிங்கம் கிடைக்கவில்லை. இதுகுறித்து கேள்விப்பட்ட தெலங்கானா காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மனோஜ், நாட் டாண்மை மற்றும் 5 பேரைக் கைது செய்தனர். பொதுச் சொத்தை சேதப் படுத்தியதாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஷிஷிஷி

உபியில் தங்கப் புதையல் குறித்து கனவில் கடவுள் வந்து கூறியதாக சாமியாரும், குவாரி அதிபருமான சோபன் சார்கார் என்பவர் கூறி யதை அடுத்து மாநிலத்தின் பல் வேறு நகரங்களில் மக்களுடன் சேர்ந்து மாநில நிர்வாகமும் தங்கப் புதையலைத் தேடி ஆங்காங்கே தோண்டினர். (2013 அக்டோபரில்).

உத்தரப்பிரதேச மாநிலம் உன் னாவ் மாவட்டத்தில் உள்ள தௌந்தியா கெரா கோட்டையின் கீழ் 1,000 டன் தங்கப் புதையல் இருப்பது போன்று தான் கனவு கண்டதாக சாமியாரான ஷோபன் சர்கார் தெரிவித்தார்.

இதையடுத்து அந்தக் கோட்டை யில் தங்கப் புதையலை தோண்டி எடுக்கும் பணி நடந்தது, ஆனால் நாய் மற்றும் காட்டுவிலங்குகளின் மக்கிப்போன எலும்புகள் மட்டுமே கிடைத்தன.

உன்னாவ் மாவட்டத்தில் உள்ள ஆதம்பூரில் 2,500 டன் தங்கப் புதையல் இருப்பதாக ஷோபன் தெரிவித்துள்ளார். இங்கும் மக்கள் பல இடங்களில் தோண்டி சாலைகளை சேதப்படுத்திவிட்டனர். ஆனால் தங்கம் மட்டும் கிடைக்கவில்லை

ஷோபனின் ஆருடத்தை அடுத்து சிலர் பதேஹ்பூரின் கங்கா காட் அருகே உள்ள பழைமையான சிவன் கோவில் பகுதியில் தங்கப் புதையலை எடுக்க மண்ணைத் தோண்ட ஆரம்பித்தனர். சுமார் 12 இடங்களில் தோண்டியும் ஒன்றும் கிடைக்கவில்லை, ஏமாற்றம்தான்.

சோபன்சாகரின் சீடர் ஓம் ஜி கூறுகையில், ஆதம்பூர் கிராமத்தில் 2,500 டன் தங்க புதையல் உள்ளது. ஆதம்பூரில் உள்ள புதையலை எடுக் குமாறு மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

இதற்கிடையே பகுரச் உள்ள சர்கா கோட்டையில் தங்கப் புதையலைத் தேடி சிலர் மணலைத் தோண்டி மலை போன்று குவித்துள்ளனர்.

பைலனி காட்டுப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் அருகேயும் மக்கள் தங்கத்தை தேடி தோண்ட ஆரம்பித்தனர். கேட்பவன் கேனயனாக இருந்தால் எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டியது என்று கூறமாட்டானா?

பேராசை இல்லாவிட்டால் பக் திக்கு இடம் ஏது?

- மயிலாடன்



.
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner