எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மயிலாடன்

 

பசுப் பாதுகாப்பில் அக்கறை செலுத்தும் பா.ஜ.க., பெண்களின் பாதுகாப்பைப்பற்றி கவலைப்படுவ தில்லை என குற்றம் சாட்டியுள்ளார் சமாஜ்வாடி எம்.பி. ஜெயாபச்சன்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் தலைக்கு 11 லட்சம் ரூபாய் என பா.ஜ.க.வின் யோகேஷ் வர்ஸ்னே கருத்துக்கு அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பா.ஜ.க. தலைவரின் பேச்சுக்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்த நிலையில், சமாஜ்வாடி கட்சி எம்.பி., ஜெயாபச்சனும், யோகேஷ் கருத்துக்கு கண் டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜெயாபச்சன் மாநிலங்களவையில் கூறியதாவது:

‘‘பா.ஜ.க. ஆட்சியில் பசுக்களுக்கு இருக்கும் பாதுகாப்புப் பெண்களுக்கு இல்லை. இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கிறார்கள். பா.ஜ.க. தலைவரின் பேச்சு பாதுகாப்பின்மையை அதிகரிப்பதாக உள்ளது’’ எனக் கூறியுள்ளார்.

பா.ஜ.க. - சங் பரிவார்க் கூட்டம் ஒருமுறையைக் கடைப்பிடித்தது. அவர்களைச் சேர்ந்தவர்கள் யார் சட்ட விரோதமாக - நியாய விரோதமாக, காட்டு விலங்காண்டித்தனமாகப் பேசினாலும், அது தவறு - கண்டிக்கத்தக்கது என்ற முறையில் அவ்வமைப்பு களின் மேல்மட்டத் தலைவர்கள் எவரும் கருத்துக் கூற மாட்டார்கள். ரொம்ப முற்றிப்போனால், அது அவரின் தனிப்பட்ட கருத்து என்று கைகழுவி விடுவார்கள்.

ஆனால், அவர்கள், அவர்களின் அமைப்புகளைப் பற்றி கொட்டியளக்கும் ஜாலங்கள் இருக்கின்றனவே - அப்பப்பா சொல்லுந்தரமன்று!

தார்மீகத்தின் பொக்கிஷம் - அறம் சார்ந்த பெட்டகம் என்று குரலை உயர்த்திப் பேசுவார்கள்.

கட்டுப்பாடு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் கூட்டம் இது - ஒரு முதலமைச்சரின் தலைக்கு விலை வைக்கிறார்கள் என்றால், இதைவிட விவஸ்தை கெட்ட - கேடு கெட்டக் கூட்டத்தை உலகின் எந்த மூலையிலும் காணவே முடியாது பச்சைப் பாசிஸ்டுக் கும்பல் அது!

பேச நா இரண்டுடையார்!

பசுவின் பெயரால் நாடு முழுவதும் நடக்கும் வன்முறை பசுவின் பதுகாப்பு என்னும் புனிதப் பணியை களங்கப்படுத்திவிடும்; இருப்பினும் இந்தியா முழுமைக்கும் பசுவதைத் தடைச்சட்டம் கொண்டு வரவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறினார்.

ராஜஸ்தான் மாநிலம், அல்வரில் கறவை மாடுகளை தனது பால்பண்ணைக்குக் கொண்டு சென்ற இஸ்லாமியர்களை பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் திரியும் குண்டர்கள் கடுமையான துன்புறுத் தலுக்கு உள்ளாக்கினர். இதில் பகலுகான் என்பவர் சாகடிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றம் மற்றும் ராஜஸ்தான் மாநில எதிர் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு கண்டனம் தெரிவித்தன. இதற்கு மோகன் பகவத் கருத்து தெரிவித்திருந்தார்.

டில்லியில் நடந்த மகாவீரர் ஜெயந்தி விழாவில் பேசியபோது,

‘‘பசுவைப் பாதுகாப்பது என்ற போர்வையில் இது போன்ற செயலில் இறங்குவது எந்த ஒரு நன்மை யையும் விளைவிக்காது. வன்முறைகளால் ஒன்றும் நடக்காது, இது பசுப்பாதுகாவலர்களின் புனிதப் பணிக்கு களங்கமாக அமைந்துவிடும். பசுப் பாது காவலர்கள், சட்டத்தை மதிக்கவேண்டும்.  அறிவிய லாளர்கள் நாட்டுப் பசுக்களை ஆய்வு செய்து அதன் சிறுநீர் மற்றும் சாணியில் மருத்துவ குணம் உள்ள தைக் கண்டறிந்துள்ளனர். இதனால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. பசுப் பாதுகாவலர்கள் இந்த மருத்துவக் குணங்களை மக்களிடையே எடுத்துச் சொல்லவேண்டும். அதைவிட்டுவிட்டு வன்முறையில் ஈடுபடுவது தவறு என்றே கூறுவேன்.  பசுவை இறைச்சிக்காக கொல்பவர்களுக்குத் துணை போகவேண்டாம்; உண்மையில் பசுவைப் பாதுகாக்க பல்வேறு வழிமுறைகள் இருந்தாலும், இந்த அரசு நாடு முழுவதும் ஒரே மாதிரியான பசுப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரவேண்டும். பசுப் பாதுகாப்பைப் பொறுத்த வரை அனைத்து மக்களும் இணைந்து பசுவைப் பாதுகாக்க உறுதிமொழி எடுக்கவேண்டும். இன்று மகாவீரர் பிறந்தநாள்! உலகத்திற்கே அகிம்சையை போதித்தவர் மகாவீரர், இதிலிருந்து என்ன தெரிகிறது? நமது நாட்டில் பல்வேறு கருத்துச் சிந்தனையு டைவர்கள் தோன்றினார்கள். இவர்கள் இந்து மதத்தின் பல்வேறு கருத்துகளை தங்களின் பார்வையில் வெளிக் கொண்டுவந்தனர்.  பசுப் பாதுகாவலர் களுக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. அதே நேரத்தில் இதுபோன்ற வன்முறையில் இறங்குபவர்கள் உண் மையான பசுப் பாதுகாவலர்கள் கிடையாது. பாஜக ஆளும் மாநிலங்களில் சிலர் வேண்டுமென்றே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின்மீது களங்கம் கற்பிக்கும் வகையில் இவ்வாறு செயல்படுகின்றனர். பாஜக ஆளும் மாநிலங்களில் பசுவைப் பாதுகாக்க சில நல்ல நடைமுறைகள் உள்ளன அதே நடைமுறைகளை பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களும் பின்பற்றவேண்டும். எங்களது (ஆர்.எஸ்.எஸ்.) தொண்டர்கள் எப்படியான சிக் கலையும் கையாள்வதில் திறமைசாலிகளாக உள்ளனர். ஆனால் அவர்கள் இது போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடமாட்டார்கள். அவர்கள் எங்களது பேச்சிற்கு கட்டுப்பட்டவர்கள் என்று கூறினார்.’’

(‘தி எகானாமிக் டைம்ஸ்’, 11.4.2017).

ஆர்.எஸ்.எஸின் இரட்டை வேடமும், இரட்டை நாக்கும் எந்தத் தரத்தில் உள்ளன என்பதற்கு ஆர்.எஸ்.எஸின் தலைவர் சர்சங் சலாக் மோகன் பகவத்தின் இந்தக் கருத்துகளே போதுமானவை.

கோமாதா பாதுகாப்பு என்ற பெயரால் நாட்டில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு உயிர்ப் பறிப்புவரை செல்லுவதற்கு ஆர்.எஸ்.எஸ்.காரர்களே காரணம் என்பதைத் தெரிந்திருந்தும் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள்; அவர்கள் சொக்கத்தங்கங்கள் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் சர்டிபிகேட் கொடுக்கிறார் என்றால், யாரை நினைத்து மதிப்பிட முடியும்?

குஜராத் மாநிலத்தில் பசுவதை செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை என்பது எந்த அடிப்படையில்?

குஜராத்தில் பசுவதைத் தடுப்புச் சட்டம் கொண்டு வரும் இந்தக் கூட்டம் வடகிழக்கு மாநிலங்களில் - சட்டம் செய்வது ஒருபுறம் இருக்கட்டும், மாட்டுக்கறி பிரச்சினையைப்பற்றி நாக்கை அசைக்கச் சொல்லுங் கள் பார்க்கலாம்.

தில்லு முல்லு செய்து கோவாவைத் தங்கள் ஆட்சிக்குள் கொண்டு வந்துள்ளார்களே - அந்தக் கோவாவில் பசுவதைத் தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வரச் சொல் லுங்கள் பார்க்கலாம். எல்லாம் ஏமாற்றுத் தனம் - கவட்டுத்தனம்தான்.

இதோ இன்னொரு தளுக்கு!

அல்வர் நகரில், தனது பால் பண்ணைக்கு கறவை மாடுகளை ஏற்றிச் சென்றவர்களின் மீது கடுமையான தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர் மரணமடைந்தார்; 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அல்வர் மருத் துவமனையில் சிகிச்சைபெற்று வரு கின்றனர்.

இது குறித்து பாஜக தரப்பில் பல்வேறு மாறுபட்ட கருத்துகள் வருகின்றன. இச்சம்பவம் குறித்து சேசாத்திரி சாரி  ‘எகனாமிக் டைம்ஸ்’ இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

‘‘பசு மிகவும் புனிதமான மரியா தைக்குரிய விலங்கு, இந்த நாட்டில் ஒரு பசு கூட இறைச்சிக்காக கொல்லப் படுவதை நான் அனுமதிக்கவே மாட் டேன், மக்களும் அனுமதிக்க மாட் டார்கள். ஆனால், அதற்காக மனிதர் களை கொலை செய்வதை ஒரு போதும் நியாயப்படுத்தமாட்டேன். இது என்னுடைய கருத்து மட்டுமல்ல, பாஜகவின் கருத்தும் கூட. ஆனால், இந்த ஒரு நிகழ்ச்சியையே மீண்டும் மீண்டும் தொலைக்காட்சிகள் முக்கியப் படுத்துவது நல்லதல்ல; ஜம்மு காஷ்மீரில் இளைஞர்கள் பாதுகாப்புப் படை யினர்மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்துகின்றனர். இதை ஒருவர் கூட முக்கியப்படுத்திப் பேசுவதில்லை. அங்கே உள்ள சில தலைவர்கள் இளைஞர்கள் பாதுகாப்புப் படையினர் மீது கல்லெறிவதை நியாயப்படுத்து கின்றனர். பாதுகாப்புப் படையினர் மீது கல்லெறிவதை நியாயப்படுத்தும் சிலர் பசுவிற்காக ஆங்காங்கே நடக்கும் சிலரின் வரம்பு மீறிய செயல்களை மட்டும் முக்கியப்படுத்துவது நாட்டு நலனுக்கு எதிரானதாகும்’’ என்று சேசாத்திரி சாரி கூறியுள்ளார்.

எப்படி இருக்கு?

பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவது உண்மை தானாம்- ஆனாலும், அதனை மீண்டும் மீண்டும் தொலைக்காட்சிகளில் விளம்பரப் படுத்துவது கூடாத ஒன்றாம். பசுவைக் காப்பாற்றுவது என்ற பெயரால் இந்தக் காவிக் கும்பல் வன்முறையில் ஈடுபடலாமாம்.

ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுதர்மப் புத்தி இவர்களிடத்தில் இன்றுவரை குடியிருந்து கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு இது ஒன்று போதாதா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner