எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மனுதர்மத்தை திராவிடர் கழக மகளிர் அணியினர் நாடெங்கும் பத்து முக்கிய மய்யங்களில் கொளுத்தினர். பெண்கள் மட்டுமே பங்கு கொண்ட இந்தப் போராட் டத்தில்ஆயிரத்திற்கும்மேற் பட்டவர்கள் கைது செய்யப் பட்டார்கள்.

பார்ப்பான்கொலைசெய் தால் அவனுக்கு மரண தண்டனைகிடையாது. அப் படி என்றால் என்னதான் அவனுக்குத் தண்டனை? தலையை மொட்டை அடித்தால் போதுமானது. சூத்திரன் உட்பட மற்ற வருணத்தார் கொலை செய்தால் சிரச்சேதம்; பார்ப்பான் கொலை செய்தால் சிகைச் சேதம்! (மனுதர்மம் அத்தியாயம் 8; சுலோகம் 379).

எல்லோருக்கும் புரியும்படிச் சொன்னால், மற்றவர்கள் உயிர் பார்ப்பான் முடிக்குச் சமம் என்றாகி விட்டது.

இப்படிக் கூட நடக்குமா? இதுஎன்னஅபவாதம்?என்று சிலர் கேட்கலாம். வெள்ளைக் காரன் ஆட்சிக் காலம்வரை 1811 ஆம் ஆண்டுவரை கூட இந்த நிலைதான்.

இது குறித்து இந்திய அர சமைப்புச் சட்டத்தின் சிற்பியான டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தெளிவாகவே கூறியிருக்கிறார்.

Under the Old Hindu Law, the Brahmin enjoyed the benefit of the clergy and not be hanged even if he was guilty of murder, and the East India Company allowed him the privilege till 1817 - Dr.Bahasaheb Ambedkar Writings and Speeches, Vol.1, P.1979 என்று டாக்டர் அம்பேத்கர், நீதித்துறையில் 19 ஆம் நூற்றாண்டுவரை மனுநீதி கோலோச்சியதைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டு வரலாற்றில் உடையார்குடி கல்வெட்டு என்பது முக்கியமான குறிப் பாகும்.

சோழவேந்தன் சுந்தரசோழ னின் மகனும், முதலாம் ராஜராஜனின் தமையனுமாகிய ஆதித்த கரிகாலன். அவனை ரவிதாசன், பரமேசுவரன், சோமன், தேவதாசன் ஆகிய நான்கு பார்ப்பனர்கள் கொலை செய்துவிட்டார்கள். இவர்கள் ஒருவருக்கொருவர் நெருங்கிய உறவினர்கள்!

அவர்கள்மீது விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை நடத்திய குழுவில் இடம்பெற்ற வர்கள் அத்தனைப் பேரும் பார்ப்பனர்களே!

உடையார்குடி சிவன் கோவிலில் கூடித் தண்டனை வழங்கினார்கள். தண்டனை என்ன தெரியுமா?

32பசுக்கள்,12குடம்பொன் மற்றும்பணியாட்கள்,ஆடை கள் அளிக்கப்பட்டு எல்லை வரை பல்லக்கில் வைத்து அழைத்துச் சென்றுவிடப் பட்டனர் (இந்தக் கல்வெட்டு களை - சென்னை அருங்காட் சியகத்தில் இன்றும் காணலாம்).

மனுநீதியை திராவிடர் கழக மகளிர் அணியினர் ஏன் எரித்தனர் என்பது இப்பொழுது விளங்குகிறதா?ஆனால்,காஞ்சி சங்கராச்சாரியார்இந்தக்கால கட்டத்தில்ஒருகொலைக் குற்றத்தில் தூக்குத் தண்ட னையை அனுபவித்திருக்க வேண்டும். எப்படியோ தப்பி விட்டார்!

- மயிலாடன்



.
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner