எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பக்தி - கிறுக்குத்தனத்துக்கு அளவேயில்லை. கடவுள் இல்லை, இல்லவே இல்லை, கட வுளைக் கற்பித்தவன் முட்டாள், பரப்பியவன் அயோக்கியன், வணங்குகிறவன் காட்டு மிராண்டி என்று திராவிடர் கழகம் சொன்னால், நறநற வென்று பற்களைக் கடிப்பார்கள், கண்கள் சிவக்கும், வாய்க்கு வந்தவாறு கோணல் மொழியில் அர்ச்சனையும் செய்வார்கள்.

ஆனால்,பக்தர்கள்நடந்து கொள்ளும் விதம் எப்படி இருக் கிறது. ஏடுகளில் வெளிவந்த ஒரு செய்தி (27.2.2017). மகா

சிவராத்திரியையொட்டி உத்த ரப்பிரதேச மாநிலம் சம்பல் என்னும் ஊரில் ஒரு கோவில். அதன் பெயர் பாடலேஸ்வர். இந்தக்கோவிலுக்குப்பக்தர் கள் அளிக்கும் காணிக்கை என்ன தெரியுமா? துடைப்பங் கள்! எதற்காகவாம்? தோல் வியாதிகள் இதனால் குணமாகு மாம்.

மருத்துவமனைகள் எல் லாம் எதற்கு? அந்தத் துறை (ஞிமீக்ஷீனீணீtஷீறீஷீரீஹ் ஞிமீஜீt)  எதற்கு? அவை எல்லாம் வீண்தானா? இவ்வளவுஎளிய வழி இருக் கும்போது, அதனைப் பயன் படுத்திக் கொள்ளலாம் என்று வலுவாகவே ‘சிபாரிசு’ செய்யத் தயாரா?

நமக்கொருசந்தேகம்...பக் தர்கள் பயபக்தியோடு கொடுக் கும் இந்தத் துடைப்பங்களை என்னசெய்வார்களாம்?கட வுளுக்கு அல்லது அர்ச்சர்க ளுக்கு முதுகு சொரிந்து கொள்ளப் பயன்படுமோ!

சில ஊர்களில் இன்னும் விநோதமானவழிபாட்டுமுறை கள் உண்டு. நாமக்கல் மாவட் டம் வெள்ளாளப்பட்டி கிரா மத்தில் அச்சப்பன் என்ற கோவில் உண்டு. அந்தக் கோவிலுக்கு என்ன விசேசம் தெரியுமா? ஆண்டுதோறும்  விஜயதசமி யன்றுவேண்டுதலுக்காகசவுக் கடி ஏற்கும் திருவிழா நடை பெறுகிறது.

இந்த சவுக்கடி ஆண் களுக்கு அல்ல - பெண்களுக்கு மட்டும்தான் - அதில் என்ன சூட்சமமோ!

பொதுவாக சவுக்கடி என்பது குற்றம்புரிந்தவர்களுக்குஅளிக் கப்படும் தண்டனை முறை; இப்பொழுதுஅதுதடைசெய் யப்பட்டுள்ளது.தடைசெய்யப் பட்ட முறை என்பதெல்லாம் பழைய பல்லவிதான். ஆனா லும், பக்தியின் பேரால் இப்படிப் பெண்கள்இப்பொழுதும் அடிபடுவது நியாயம்தானா? (பெண்ணுரிமை அமைப்புகள் துடித்து எழவேண்டாமா?) பக்தி என்றால் பதுங்கல்தானா?

இவற்றையெல்லாம் தாண்டி இன்னொருகேவலமானதமாஷ்! எங்கே? சேலம் அன்னதானப் பட்டியில். ஆண்டுதோறும்  செருப்படித் திருவிழா நடந்து கொண்டு வந்துள்ளது. தட்சணை கொடுத்து படித்தவர்கள்கூட செருப்படிபடுகிறார்கள்.

மக்களில் இருவகை உண்டு; படித்த பாமரன், படிக்காத பாமரன் என்பதுதான் அந்த இருவகை.

குழந்தைப் பேறு இல்லாத வர்கள் கோவில் வாயில்களில் குப்புறப்படுத்துக் கொள்வதும், ஆணிகள் பதித்த செருப்புக் கால்களால் பூசாரி நடந்து செல்வதும்கூட நடக்கிறதே!

இப்பொழுது சொல்லுங்கள் கடவுள் இல்லை, இல்லவே இல்லை, கற்பித்தவன் முட்டாள், பரப்பியவன் அயோக்கியன், வணங்குகிறவன் காட்டு மிராண்டி என்று தந்தை பெரியார் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மைதானே!

- மயிலாடன்



.
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner