புட்டபர்த்தி சாய்பாபா கடும் நோய்க்கு ஆளாகி மரணமடைந்துவிட்டார். அவர் உயிரோடு இருந்த காலத்தில் முட்டாள்தன மாக அவரைத் தரிசிக்க வரும் பக்தர்களின் எண் ணிக்கை இப்பொழுது படுத்துவிட்டது.
அந்த அப்பாவி பாமர மக்களின் கூட்டத்தை நம்பி வியாபாரம் நடத்தி வந்தவர்களின் பிழைப்பில் மண் விழுந்துவிட்டது.
எதையாவது செய்து எப்படியும் கூட்டத்தை வரவழைக்கும் வேலையில் வியாபாரிகளும், பக்தி வியாபாரிகளும் பெரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாய்பாபா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சமாதி ஒன்றை எழுப்பி, அதற்கொரு மகத்து வத்தை உண்டாக்கி விட்டால் போதுமானது; மாட்டு மந்தைகளாகப் பக்தர்கள் வந்துகூடிவிடு வார்கள் என்று நினைக் கின்றனர்.
ஊடகங்களைப் பயன் படுத்தி அதற்கான பிரச் சாரத்திலும் ஈடுபட்டு விட்டார்கள்.
சாய்பாபாவுக்குக் கண்மூடித்தனமாக வந்து குவிந்த பெரு நிதியிலி ருந்து உள்ளூரில் மருத் துவம் உள்ளிட்ட பல நன் மைகளைப் பொதுமக்க ளுக்குச் செய்து கொடுத் திருக்கிறார் என்பதெல் லாம் உண்மைதான்.
அவர் மறைவிற்குப் பிறகு அந்தப் பணிகளில் எல்லாம்கூட சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது! சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை நிறுத்திவிட்டார்கள்.
நாள்தோறும் நடந்து வந்த இருதய அறுவை சிகிச்சைகளின் எண் ணிக்கை குறைந்து போயிற்று.
ஆண்டுதோறும் புட்ட பர்த்தியில் நடைபெற்று வரும் குருபூர்ணிமா நிகழ்ச்சியில் அந்தச் சின்னஞ்சிறு ஊரில் 5000 பேர் கூடுவார்கள்; இந் தாண்டு வெறும் 1500 பேர்கள்தான் வந்தார் களாம்.
இந்தக் கூட்டத்தை ஈர்க்கக் கூடிய வகையில் எதையாவது அற்புதத்தை அவிழ்த்துவிடத்தான் போகிறார்கள்.
அதேநேரத்தில், இன் னொன்று - சாய்பாபா இறந்தவுடன் லாரி லாரி யாகப் பணம் கடத்தப் பட்டு, பிடிக்கப்பட்டதே - அதுபற்றி, அதற்குப் பிறகு எந்தத் தகவலும் வெளி வரவில்லையே ஏன்? அதன் பின்னணியில் இருந்தவர் கள் பெரிய இடத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அமுக்கப்பட்டுவிட்டதா?
மர்ம முடிச்சு அவிழ வில்லையே!
பகவான் விஷயமென் றால் சட்டமெல்லாம் சப்தம் இல்லாமல் சப்த நாடியும் ஒடுங்கிப் பதுங்கு குழி யைத் தேடிவிடுமோ!
- மயிலாடன்