Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாட்டி சொன்னால் கேட்காதவர்கள் பாட்டி லில் அச்சடித்துச் சொன் னால் கேட்கிறார்களாம்.

இது என்ன  பூடகம்? வேறு ஒன்றும் இல்லை. மாட்டு மூத்திரத்தைக் கோமியம் என்று சொல்லி பாட்டிலில் அடைத்து ரூபாய் 20க்கு (200 மில்லி) விற்றுக் கொண்டு இருக்கிறார்களாம்.

திதியின் போது பார்ப்பனப் புரோகிதர்கள் பஞ்ச கவ்யம் என்ற ஒன் றைக் கொடுப்பார்கள். மாட்டு மூத்திரம், மாட்டுச் சாணம், பால், தயிர், வெண்ணெய் என்கிற பசு மாட்டின் மூலம் கிடைக் கும் அய்ந்து பொருள் களையும் கலக்கிக் கொடுப்பதுதான் பஞ்ச கவ்யம்.
பார்ப்பனப் புரோகி தன் கொடுக்கும் இந்த கோமியத்தை நம் வீட்டுப் பெரியவர்கள் தட்சணை கொடுத்து வாங்கி முடக்கு முடக்கு என்று பக்திப் பரவசத்தால் குடிப்பார்கள்.  அது கீழே சிந்தி விடக் கூடாதாம். அப்படி சிந்துகின்ற அந்த மாட்டு மூத்திரம் கலந்த அந்தப் பஞ்ச கவ்யத்தைக் கைகளில் பிடித்து பய பக்தியுடன் தலையிலும் தடவிக் கொள்வார்கள். பக்தியின் பெயரால் இந்த ஆபாசம் - அநாக ரிகக் கூத்து அரங் கேறுவதுண்டு.

இதுகுறித்து தந்தை பெரியார் அவர்கள் நம் மக்களுக்குப் புரியும்படி ஒன்றைச் சொல்லுவார்கள்.

அந்த மாட்டு மூத் திரம், சாணியைக் கரைத் துக் குடிக்கும்போது முகம் சுளிக்காமல் குடிக் கிறானா என்று பார்ப் பான் பார்ப்பானாம்; முகம் சுளிக்காமல் குடித்தால், பரவாயில்லை இந்த முட்டாள் பசங்களை இன் னும் ஆயிரம் வருஷங் களுக்கு மொட்டை அடிக்கலாம் - சுரண் டலாம்! என்று பார்ப்பான் முடிவுக்கு வருவான் என்று கூறிய பகுத்தறிவுப் பகலவன் பஞ்சகவ்யத்தை நம் மக்கள் குடிப்பது - நமது முட்டாள்தனத்தை அளக்கும் தர்மாமீட்டர் என்று குறிப்பிட்டாரே பார்க்கலாம்.
முட்டாள்தனம் பாட் டிலில் அடைத்து விற்கப் படுவதும், இந்த அடி முட்டாள்கள் காசு கொடுத்து அதை வாங் கிக் குடிப்பதும் எவ்வள வுக் கேவலம்!

கடைசியில் ஒரு கேள்வி (Tailpiece) பாட் டிலில் அடைத்து விற்கப் படும் அந்தப் பசு மூத்தி ரத்தை கிண்டி கிங் இன்ஸ்டியூட்டுக்கு அனுப்பி பரிசோதிக்கத் தயாரா? விஞ்ஞானத் துக்கு உட்படுத்தப்படாத இந்த அசிங்கத்தை ஆபத்தை அரசு எப்படி அனுமதிக்கிறது?  - மயிலாடன்



.
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh