
தமிழ் ஆண்டைப் போலச் சிந்துசமவெளி மக்களுக்கு ஆண்டுப் பிறப்பு தை மாதத் திலேயே தொடங்கிற்று. சுமேரியருக்கு இராசிகள் பத்தாயிருக்க, சிந்து சமவெளி மக்களுக்கு எட்டேயிருந்தன. இதனால் சிந்துவெளி நாகரிகத்தின் பழைமை கி.மு. 5610 வரை எட்டுவதாக தெரிகிறது. இது சுமேரிய நாகரிகம் பிறப்பதற்கு ஆயிரக்கணக் கான ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமாகும். மனித நாகரிகத்தின் பிறப்பிடமும், வளர்ப்புப் பண்ணையும் எகிப்தோ, பாபிலோனோ அல்ல சிந்துவெளியும் தென்னாடுமே என்பதை, இது அறுதியிட்டுக் காட்டு கிறது. (தென்னாடு கா. அப்பாத்துரை பக்கம் 48).
இதன் மூலம் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதை நிறுவுகிறார் பன்மொழிப் புலவர்.
திராவிட இந்தியா ஒன்று நீங்கலாக இவ் வளவு பழமைக்காலம் முதல் இன்றளவும் தழைத்து வரும் நாகரிகம் உலகில் வேறெதுவும் கிடையா தெனலாம். திராவிடமாவது இந்தியப் பரப்பு முழுவதிலு மிருந்து படிப்படியாகத் தேய்வுற்றுத் தென் கோடி யில் ஒரு கோடி மக்கள் அளவிலேயே உயிர்ப்புடன் நிலவுகின்றது.
(உலக இலக்கியங்கள் கா. அப்பாத்துரையார் பக்கம் 28).
1920ஆம் ஆண்டில் கில்பர்ட் சிலேட்டரால் எழுதப் பெற்ற கூந னுசயஎனையை நுடநஅநவே ஐனேயை ஊரடவரசந என்ற நூலைப் பன்மொழிப் புலவர் கா. அப்பாத் துரையார் 1955ஆம் ஆண் டில் மொழி பெயர்த்துள் ளார். அவருக்கே உரிய முறையில் ஆங்காங்கே விளக்கங்கள் ஆய்வுலகின் புதிய முடிவுகள் ஆகிய வற்றை அடிக்குறிப்பாகவும் தந்துள்ளார். திராவிடர் இந்தியாவுக்கு வெளியே யிருந்து வந்திருக்க வேண் டும் என்ற தவறான கருத்தை ஆராய்ச்சியாளர் பலர் கொண்டிருந்தனர் என்று கூறுவதோடு இந் தியாவினுள் படையெடுத்து வந்த எவரும் இந்தியாவின் தொல்குடிகளைப் போல மேம்பட்ட நாகரிகம் உடைய வரில்லை என்பதையும் அழுத்தமாக நிறுவுகிறார் அப்பாத்துரையார்.
இவற்றின் மூலம் திராவிடர் திராவிடம் என்ப தெல்லாம் வெறும் மாயை எனும் மாய்மாலக்காரர் களுக்குப் பன்மொழிப் புலவர் தம் புலமை மிக்க பன்மொழி ஆய்வோடு பதில் அளித்து இருக்கிறார்.
இன்று நம் பன் மொழிப்புலவரின் நினைவு நாள் (1989)
- மயிலாடன்
(குறிப்பு: தகவல் களுக்கு உதவியது பன் மொழிப் புலவர் கா. அப்பாத் துரையார் - கு.வெ. பாலசுப்பிரமணியன்)