எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாகர்கோவில், மார்ச் 13- நாகர்கோயிலில் இன்று (13.3.2019) தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் முதல் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.

இப்பிரச்சாரப் பொதுக்கூட்டம் நாகர்கோயில் ஸ்காட் கிறித்தவ கல்லூரி மைதானத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்குகிறார். ராகுல்காந்தி சிறப்புரை ஆற்றுகிறார். தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதின், மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்று பேசுகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner