எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதுரை, பிப்.10 மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி நிதி ஒதுக்கியதை பாராட்டும் வகையில் அவரை புகழ்ந்து அதிமுகவினர் சுவரொட் டிகள் அடித்து ஒட்டியுள்ளனர்.

பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கடந்த மாதம் 27ஆம் தேதி தமிழகம் வந்தார். அப்போது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைப் பதற்கு அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் பிரதமர் மோடியை புகழ்ந்து அதிமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த எஸ்.பி. சண்முக நாதன் போஸ்டர் ஒன்றை அடித்து, சுவர்களில் ஒட்டி யிருந்தார்.

அதில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்திட நிதி ஒதுக்கிய குஜராத் காமராஜர், டில்லி எம்.ஜி.ஆர் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றிகள் எனக் குறிப்பிட்டுள்ளார். அதற்கு அடுத்த படியாக முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சருக்கு அவர் நன் றியை தெரிவித்துள்ளார். அந்தப் போஸ்டரில் ஜெயலலிதாவின் படமும் இருக்கிறது.

இதற்கு முன் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப் பதற்காக பலமுறை பேச்சுவார்த் தைகளும், ஆலோசனைகளும் நடத்திய மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை புகழ்ந்து அதில் எந்த வார்த்தைகளும் இல்லை. அவரது புகைப்படம் மட்டுமே உள்ளது. ஏற்கெனவே மக்கள வைத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி வைக்கவுள்ளதாக பேசப்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற போஸ்டர்கள் அவற்றை உறுதிப்படுத்தும் வகையில் அமைவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner