எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தம்பிதுரை மீண்டும் மீண்டும் கேள்வி

மணப்பாறை, பிப்.10 திராவிட கட்சிகளை வளரவிட மாட்டோம் என பா.ஜ. தலைவர் தமிழிசை பேசுகிறார், அந்த கட்சியை நாங்கள் எப்படி தூக்கி சுமக்க முடியும் என தம்பிதுரை மீண்டும் காட்டமாக கேட்டார். திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதிக்கு உட்பட்ட கருப்பூர், காடபிச்சம்பட்டி உள்ளிட்ட கிரா மங்களுக்கு சென்ற மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அளித்த பேட்டி:

கேள்வி: நாடாளுமன்ற தேர்தலில் பாஜ- & அதிமுக கூட்டணி உண்டா, இல்லையா?

பதில்: தேர்தல் அறிவிப்பு வரட்டும். தேர்தல் அறிவிக்கப் பட்டால் தான் கூட்டணி உண்டா, இல்லையா என்று தெரியும்.

கேள்வி: பாஜ கூட்டணியை நீங்கள் மட்டும் ஏன் எதிர்க்கிறீர்கள்?

பதில்: மத்திய பாஜ அரசு தமிழகத்துக்கு எந்த உதவியும் செய்யவில்லை. ஊழல் அரசு, மக்கள் விரோத அரசு, செயலற்ற அரசு என பாஜ. தலைவர்கள் விமர்சனம் செய் கிறார்கள். இந்த விமர்சனத்துக்கு நான் ஒரு அதிமுக தொண்டன் என்ற முறையில் பதில் சொல்கிறேன். திராவிட கட்சிகளை வளர விடக்கூடாது என்று பா.ஜ தலைவர் தமிழிசை கூறும் போது, அந்த கட்சி தமிழகத்தில் வளர நாங்கள் அனுமதிக்க முடியுமா, அவர்களை நாங்கள் எப்படி தூக்கி சுமப்போம்?

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க மறுத்தது கண்டனத்திற்குரியது. மத்தியஅரசு அனுப்பிய நிதியை மாநில அரசு செலவு செய்யவில்லை என புகார் தெரிவிக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner