எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

சென்னை, ஜன. 13 திருவாரூர் மாவட்டம், திருக்காரவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க பாஜக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே, புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து மக்களின் ஒப்புதல் இல் லாமல் எந்தத் திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தாது என உறுதியளிக்கப்பட்டது. காவிரி பாசனப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண் டும் என அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நாகை, கடலூர் மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

தூத்துக் குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் 13 மனித உயிர்களை பறித்த வேதாந்த நிறுவனத் திற்கு உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்து மத்திய அரசு வழங்கிய உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப் பட்டது. ஆனால், மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழக மக்களின் உணர்வுக்கு மதிப் பளிக்கவில்லை. ஜனநாயக அணுகுமுறையை கடைப் பிடிக்கவில்லை. மாறாக, எதேச் சதிகார நடைமுறையில் தற்போது, 419.19 சதுர கிலோ மீட்டர் நிலப் பரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்க முடிவு செய்து திருவாரூர் மாவட்டம், திருக் காரவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் உரிமம் ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டி 66 டிஎம்சி தண் ணீரை தேக்கிக் கொள்ள, விரிவான திட்டம் தயாரிக்க கர்நாடகா அரசுக்கு அனுமதி வழங்கிய மத்திய பாஜக அரசு தமிழகத்தின் காவிரி பாசனப் பகுதிகளை பாலைவனமாக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது.

தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் பாஜகவின் மக்கள் விரோதச் செயலை இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வன்மையாகக் கண்டிப்பதாக மாநிலச் செய லாளர் இரா. முத்தரசன் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார். திருக்காரவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கும் உரிம ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் காவிரிப் பாசனப் பகுதிகளை பாது காக்கப்பட்ட வேளாண்மை மண் டலமாக அறிவிக்க வேண்டும் என்றும் முத்தரசன் வலியுறுத்தியிருக்கிறார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner