எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருப்போரூர், ஜன. 13- திருப் போரூரை அடுத்த இள்ளலூர் ஊராட்சியில் தி.மு.க. சார்பில் ஊராட்சி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

அண்ணா, கலைஞர் ஆகி யோர் வழியில், ஆட்சியில் இல் லாவிட்டாலும் மக்களுக்கு தேவை யானது கிடைக்க போராடுவதற் காக தி.மு.க. தமிழ்நாடெங்கும் இந்த ஊராட்சிசபை கூட்டத்தின் மூலம் மக்களை நேரிடையாக சந்தித்து வருகிறது. தமிழகத்தில் நடைபெறும் எடப்பாடி ஆட்சிக்கு மத்தியில் நடைபெறும் மோடி ஆட்சி முட்டுக்கொடுத்து காப்பாற்றி வருகிறது. இரண் டையும் அகற்றுவதுதான் நீங்கள் வைக்கப்போகும் முற்றுப் புள்ளி. அதற்கு மாற்றாக தி.மு.க. ஆட்சிக்குவர நீங்கள் செலுத்தும் வாக்குதான் நாட்டில் நல்லது நடப்பதற்கான தொடக்கப்புள்ளி.

மீண்டும் தி.மு.க. ஆட்சிதான் வரும் என்று எங்களுக்கு நம் பிக்கை இருக்கிறதோ இல்லையோ பொதுமக்களுக்கும், இங்கு வந் துள்ள பெண்களுக்கும் நம்பிக்கை உள்ளது. இன்னும் 4 மாதத்தில் வரப்போகிற நாடாளுமன்ற தேர் தலோடு சட்டமன்ற தேர்தலும் வரப்போகிறது என மக்கள் பேசத்தொடங்கிவிட்டனர்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவு டன் உள்ளாட்சிதேர்தல் நடத்தப் படும். உள்ளாட்சி தேர்தல் நடத் தாதற்கு தி.மு.க. தான் காரணம் என அ.தி.மு.க. சார்பில் பரப்பப் படுகிறது. உரிய இடஒதுக்கீடு அடிப்படையில் உள்ளாட்சிதேர் தலை நடத்தவேண்டும் என்று தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். கலைஞர் ஆட்சியில்தான் பெண்களுக்கு 33 சத வீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட் டது. இதை பார்த்துதான் மற்ற மாநிலங்களிலும் பின்பற்றினார் கள். தி.மு.க. ஆட்சியில் பெண் கள் தன்னம்பிக்கையுடன் வாழ, தலைநிமிர்ந்து நிற்க எண்ணற்ற மகளிர்சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி கடன் வழங்கப்பட்டது நானே முன்னின்று வழங்கியுள் ளேன். பா.ஜனதா தமிழ்நாட்டில் அ.தி.மு.க. மூலம் நுழைய முயற்சி செய்கிறது. மத்தியில் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு கொண்டு வருவ தற்கு திமுக எதிர்ப்பு தெரிவித் தது. இதுபற்றி சட்டமன்றத்திலும் தெரிவித்தோம். ஆனால் அ.தி. மு.க. கபடநாடகம் ஆடுகிறது.

ராஜீவ்காந்தி கொலை வழக் கில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில்வாடும் 7 பேரை விடு விக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு என்ன ஆனது. ஆனால் தர்மபுரி பேருந்து எரிப்பில் தண்டனைக்குள்ளான வர்கள் விடுவிக்கப்படுகின்றனர். மத்திய மாநிலத்தில் உள்ள இந்த 2 கட்சிக்கும் முற்றுப்புள்ளி வைத்து தி.மு.க. ஆட்சி மலர தொடக்கப்புள்ளி வைக்க வேண் டும். இவ்வாறு பேசினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner