எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜன. 12- பிரதமர் நரேந் திரமோடியின் பேச்சு குறித்து வைகோ பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவி டம், ‘வாஜ்பாய் காட்டிய வழி யில் கூட்டணி அமைப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியிருக்கிறார். வாஜ்பாய் இருந்த போது, பா.ஜ.க. கூட்டணியில் நீங்கள் இருந்து இருக்கிறீர்கள்?. தற்போது நாடாளுமன்ற தேர்த லில் பா.ஜ.க. கூட்டணியில் ம.தி. மு.க. சேர வாய்ப்பு இருக்கிறதா? மோடியின் அழைப்பு குறித்து என்ன நினைக்கிறீர்கள்?’ என்று செய்தியாளர்கள் நேற்று (11.1.2019) கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

ஆர்.எஸ்.எஸ். பின்புலம் இருந்தாலும் கூட்டணி கட்சிக ளின் கூட்டத்தை கூட்டி மதச் சார்பின்மையை வாஜ்பாய் பாது காத்தார். மக்கள் நலனுக்காக ஆட்சி புரிந்தார். தங்க நாற்கர சாலை திட்டத்தை கொண்டு வந்தும், தன்னை விளம்பரப்படுத் திக் கொள்ளவில்லை. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தனியார் மயமாக்க முயன்றபோது, என் வற்புறுத்தல் காரணமாக தனது முடிவை வாஜ்பாய் மாற்றிக் கொண்டு, தமிழகத்திற்கு நன்மை செய்தார். இப்படி அவரைப் பற்றி சொல்லிக் மோடி அரசு காவிரி பிரச்சினையில் இருந்து அனைத்து விஷயங்களிலும் தமிழகத்திற்கு துரோகம் செய்து விட்டார் என்பதை அழுத்தம் திருத்தமாகவே சொல்லிக்கொள் கிறேன். வாஜ்பாய் அணுகுமுறைக்கு நேர் எதிராக அறிவிக்கப்படாத சர்வாதிகாரி போல மோடி செயல்பட்டு வருகிறார். வாஜ்பாய் பெயரை உச்சரிக்கும் தகு தியை கூட அவர் இழந்து விட் டார். அவர் தலைமையிலான பா.ஜ.க.வுடன் நிச்சயமாக ம.தி. மு.க. கூட்டணி வைக்காது. அதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை. பா.ஜ.க. கூட்டணியில் தி.மு.க.வும் இணையாது. இதை திட்டவட்ட மாக தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் நரேந்திரமோடி தமி ழகத்திற்கு 27-ஆம் தேதி வந்தா லும், எப்போது வந்தாலும் பா. ஜ.க.வுக்கு தோல்வி தான். எங் களை பொறுத்தவரையில் தி.மு.க. கூட்டணியில் ம.தி. மு.க. உறுதியாக இருக்கிறது. தி.மு.க. கூட்டணி தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வென்று சாதனை படைக்கும். தி.மு.க.வின் வெற் றிக்காக ம.தி.மு.க. பாடுபடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner