எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மோடி தலைமையிலான பாஜவுடன்

தி.மு.க ஒருபோதும் கூட்டணி வைக்காது

சென்னை, ஜன. 12- பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜவுடன் திமுக ஒருபோதும் கூட்டணி வைக்காது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் 11.1.2019 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை: ‘வாஜ்பாய் கலாச்சாரத்தை பின்பற்றி நம்முடைய பழைய நண்பர்களை வரவேற்க நாம் எப்போதுமே தயாராக இருக்கி றோம். கூட்டணிக்கான கதவு கள் திறந்தே இருக்கின்றன’ என்று பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் உள்ள தனது கட்சி நிர்வாகிகளுடன் காணொ லிக் காட்சியில் பேசும்போது குறிப்பிட்டுள்ளது வியப்பாக வும் விசித்திரமாகவும் இருக்கி றது.

சமூக நீதியை குறிதோண்டி புதைக்கும் மோடி

இந்த நான்கரை ஆண்டு காலத்தில் இந்திய ஒருமைப் பாட்டினை பலப்படுத்தவோ, வலுப்படுத்தவோ எந்த வகை யிலும் உதவாத வெறுப்பு பேச் சுக்களை விதைத்து, பிற்படுத் தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப் பட்ட, மலைவாழ் மக்களின் நண்பன் என்று கூறிக் கொண்டே சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, தமிழகத்தின் நலன் களை அடியோடு புறக்கணித்து  கூட்டாட்சித் தத்துவத்திற்கு உலை வைத்து - அரசியல் சட் டத்தின் கீழ் இயங்கும் அமைப் புகள் அனைத்தையும் தலை சாய வைத்துள்ள பிரதமர் மோடி, தன்னை, ‘சரியான மனிதர் தவறான கட்சியில் இருக்கிறார்’ என்று தலைவர் கலைஞரால் வர்ணிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் ஒப்பிட் டுக் கொள்வது வேடிக்கையா கவும், வினோதமாகவும் மட்டு மல்ல - வழக்கம் போல அவரது ‘பிரச்சார யுக்தியாகவே’ இருக் கிறது.

குறைந்தபட்ச செயல்திட்டம்

“நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு நிலையான ஆட்சி தேவை” என்ற ஒரே உன்னத நோக்கத்திற் காக - பாஜவும் இடம்பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியில் “குறைந்தபட்ச செயல் திட்டம்” உருவாக்கிய பிரதமர் வாஜ்பாயு டன் திமுக கூட்டணி வைத்தது. நாட்டை பிளவுபடுத்தும் எந்த வேலைத்திட்டத்தையும் முன் வைக்காமல் ஒரு அஜெண் டாவை உருவாக்கி தேசிய ஜன நாயக கூட்டணியை பிரதமராக இருந்த வாஜ்பாய் ஏற்படுத்திய தையும், திமுக நிலையான ஆத ரவுடன் அவர் ஆட்சி செய்ததை யும் நாடறியும். பிறகு மதவா தக்குரல்கள் எழுந்தவுடன் அக் கூட்டணியில் இருந்து துணிச்ச லுடன் வெளியேறியதும் திமுக தான் என்பதையும் நாடறியும். ஆனால், தற்போது பிரதமர் நரேந்திர மோடி வாஜ்பாயும் அல்ல - அவர் தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கூட் டணி வாஜ்பாய் உருவாக்கியது போன்றதொரு ஆரோக்கியமான கூட்டணியும் அல்ல.

தமிழக உரிமைகள் பறிப்பு

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை போற்றி பாதுகாப் பதற்காக பிரதமர் மோடி ஆட் சிப் பொறுப்பில் இருப்பவரும் அல்ல. முன்பு எந்தப் பிரத மரும் ஆட்சி செய்த போது இல்லாத அளவிற்கு தமிழக உரிமைகள் பறிக்கப்பட்டது பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில்தான் என்பதை தமிழக மக் கள் என்றைக்கும் மறக்க மாட் டார்கள். “மதசார்பின்மை”, “சமூக நீதி”, “சமத்துவம்”, “கூட்டாட்சித் தத்துவம்”, “மாநில உரிமைகள்” எல்லாம் தனக்கு “வேண்டாத வார்த்தை கள்” என்ற விபரீத மனப்பான் மையில் கடந்த நான்கரை ஆண்டுகாலமாக பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் நரேந் திர மோடி தலைமையிலான பாஜகவுடன் திமுக ஒருபோதும் கூட்டணி வைக்காது என்பதை மீண்டும் ஆணித்தரமாக விளக் கிட விரும்புகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner